Wednesday, May 24, 2017

ஸ்மிருதியை துரத்தும் கல்வித்தகுதி வழக்கு

புதுடில்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த வழக்கில், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது, அவருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.



பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 41, ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளார். தற்போது ஜவுளித் துறையை கவனித்து வரும் அவர், முதலில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, டில்லியைச் சேர்ந்த அகமது கான் என்பவர், டில்லி கோர்ட்டில்,

ஒரு வழக்கு தொடர்ந்தார்.பொய் தகவல் 'மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2004 லோக்சபா தேர்தலின் போது, 1996ல் டில்லி பல்கலையில், பி.ஏ.,தேர்ச்சி பெற்றதாக கூறினார். 

அதே நேரத்தில், மற்றொரு தேர்தலில், டில்லி பல்கலை தொலைதுாரக் கல்வி மூலம், பி.காம்., தேர்ச்சி பெற்றதாக கூறியுள்ளார். அவர் பட்டப் படிப்பையே முடிக்கவில்லை. தேர்தல் கமிஷனுக்கு பொய்யான தகவல் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த ஆதாரங்கள் ஏதும் தங்களிடம் இல்லை என, டில்லி பல்கலையும்,தேர்தல் கமிஷனும் தெரிவித்தன. இந்த வழக்கை, டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

தலைவலி

இந்த தீர்ப்பை எதிர்த்து, அகமது கான், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
'அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்த பின்னே, தேவைப்பட்டால், ஆஜராகும்படி, ஸ்மிருதி இரானிக்கு ஐகோர்ட் உத்தரவிடும். அதனால், தற்போதைக்கு அவருக்கு பிரச்னை இல்லை என்றாலும், இது அவருக்கு ஒரு தலைவலிதான்' என, வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025