Wednesday, May 24, 2017

பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பதிவு செய்த நாள்24மே2017 05:25




சென்னை: 'இன்று, தமிழகத்தின் கடற்கரையிலிருந்து எட்டியுள்ள மாவட்டங்களில், கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அக்னி நட்சத்திரம்:

தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. அக்னி நட்சத்திரம் வருகிற 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இரண்டு வாரங்களாக, வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில், அனல் அலை வீசியது. அதனால், 24 இடங்களுக்கு, அனல் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அனல் அலை தணிந்து, பெரும்பாலான மாவட்டங்களில், வெப்ப நிலை, 40 டிகிரிக்கு கீழ் குறைந்து உள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக இன்று(மே 24) முதல் அடுத்த 4 நாட்களுக்கு பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் வெப்பம், அதிகபட்சமாக 100 டிகிரியாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025