Wednesday, May 24, 2017

மெட்ரோ ரெயில் பயண அட்டையில் ரூ.3 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்யும் வசதி

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மே 24, 2017, 01:27 AM

மெட்ரோ ரெயில் பயண அட்டையில் ரூ.3 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்யும் வசதி

சென்னை,
திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்க ரெயில்பாதையில் கடந்த 14–ந்தேதி முதல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 621 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 1 லட்சத்து 23 ஆயிரத்து 827 ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த 21–ந்தேதி வரை மெட்ரோ ரெயிலில் 20 லட்சத்து 25 ஆயிரத்து 439 பேர் பயணம் செய்துள்ளனர். நேரு பூங்காவில் இருந்து பரங்கிமலை வரை ரூ.45–ம், நேரு பூங்கா முதல் விமானநிலையம் வரை ரூ.54 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஸ்மார்ட் கார்டுகள் வினியோகிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குழுவாக பயணம் செய்தால் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக தனியாக பயண அட்டை விற்பனை செய்யப்படுகிறது. ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்பனை செய்யும் எந்திரத்தில் ரீசார்ஜ் செய்துவிட்டு பயணத்தை தொடரலாம். குறைந்த பட்சம் ரூ.50–க்கு கிடைக்கிறது. தேவையில்லை என்று அட்டையை திரும்ப செலுத்தினால் ரூ.10 திருப்பி தரப்படும். அதிகபட்சமாக நாம் பயணம் செய்யும் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ரூ.3 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025