Wednesday, May 24, 2017


விசா காலம் முடிந்த 30,000 இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளதாக தகவல்

By DIN  |   Published on : 24th May 2017 03:15 AM  |  
கடந்த ஆண்டில் விசா காலம் முடிந்த பிறகும் 30,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
விசா காலம் முடிந்த பிறகு அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்த அறிக்கையை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7,39,478 பேர் தங்கியுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 1.47 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா வந்துள்ளனர். அவர்களில் 30,000-க்கும் மேற்பட்டோர் விசா காலம் முடிந்த பிறகும் நாட்டை விட்டு வெளியேறாமல் உள்ளனர்.
வர்த்தகம், சுற்றுலா விசாக்கள் மூலம்தான் அதிகபட்சமாக 10 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர். இந்த விசாக்களில் வந்தவர்களில் 17,763 பேர் விசா காலம் முடிந்து அமெரிக்காவை விட்டு வெளியேறவில்லை. விசா முடிந்தவர்களில் 2,040 பேரை கண்டுபிடித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
மாணவர்கள் விசாவில் இந்தியாவில் இருந்து வந்தவர்களில் 3,014 பேர் விசா காலம் முடிந்தும் அமெரிக்காவை விட்டு வெளியேறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 21.12.2025