Wednesday, May 24, 2017


ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: மனுக்கள் பெற்றார் அமைச்சர் ஜெயக்குமார்

By DIN  |   Published on : 24th May 2017 03:29 AM  |  
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று ஓய்வூதியர்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் அரசு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோர் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகள் குறித்த மனுக்களை அமைச்சரிடம் அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் சென்னை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோர் திரளாகக் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், ஓய்வூதியர் அலுவலக இயக்குநர் கயிலைநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 21.12.2025