Thursday, May 25, 2017

முதுநிலை மருத்துவம் 67 பேருக்கு 'சீட்'
பதிவு செய்த நாள்24மே2017 22:26

சென்னை: அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில், 67 பேர் இடங்கள் பெற்றனர்.சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவ
மனையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. நேற்று முதல், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 335 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் துவங்கியது.மேலும், சுயநிதி கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலையில் உள்ள, 172 அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கும் நடைபெறுகிறது. நேற்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்ற, 624 பேரில், 67 பேர் இடங்கள் பெற்றனர். வரும், 27 வரை, கவுன்சிலிங் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025