Thursday, May 25, 2017

மானாமதுரையில் 'நுங்கு'விற்பனை அமோகம்
பதிவு செய்த நாள்24மே2017 23:26

மானாமதுரை, மானாமதுரையில் கடந்த 3 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திர வெயிலால் மக்கள் வெளியே செல்ல தயங்கி வருகின்றனர்.

வெயிலிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்பானங்கள்,நுங்கு,இளநீர்,தர்பூசணி பழங்கள்,வெள்ளரிக்காய், போன்றவற்றை அருந்தி வருகின்றனர்.தற்போது மானாமதுரை சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் இருந்து 'நுங்கு'சீசன் ஆரம்பித்ததை தொடர்ந்து பல இடங்களில் நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 நுங்கு ரூ.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.வியாபாரி இடைக்காட்டூர் பாண்டி கூறுகையில்: தற்போது மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளன.தற்போது குறைந்த அளவு மரங்களே உள்ளன.கடந்த 4 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் ஏராளமான
மரங்கள் பட்டுப்போய்விட்டன.இதனால்' நுங்கு' வரத்து குறைந்துள்ளது.ஆகவே விற்பனைக்கு கொண்டு வந்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுகின்றன என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025