Tuesday, May 23, 2017

மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93.45 கோடியாக உயர்வு

நம் நாட்டில், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 93.45 கோடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, இந்திய மொபைல் போன் நிறுவனங்கள் அமைப்பினர் கூறியதாவது: 

நம் நாட்டில், ஏப்ரலில் மட்டும், 28 லட்சம் பேர், புதிதாக மொபைல் இணைப்பு பெற்றுள்ளனர். தற்போது, மொத்த மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ௯௩.௪௫ கோடியாக உயர்ந்துள்ளது. இதில், 28.50 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்ற, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 27.65 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்ததாக, வோடபோன், 20.98 கோடி; ஐடியா செல்லுலர், 19.60 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025