Tuesday, May 23, 2017

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை

பதிவு செய்த நாள்
மே 22,2017 22:43


புவனேஷ்வர்: மத்திய அரசால் செல்லா தென அறிவிக்கப்பட்ட, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரித்து, ஒடிசா மாணவன் சாதனை படைத்துள்ளான்.

ஒடிசாவில், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த, நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இங்கு, நுவாபடா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் படிக்கும், லக்மண் துண்ட், 17; ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கல்லுாரி நேரத்திற்கு பின், மின்சார பல்பு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து உள்ளான்.

இது குறித்து, லக்மண் கூறியதாவது: செல்லாத, 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தும் வழி குறித்த யோசனையில், ரூபாய் நோட்டை கிழித்தேன். அப்போது, அதில் இருந்த, சிலிக்கான் பிளேட்டை பார்த்ததும், மின் உற்பத்தி செய்ய திட்டம் தோன்றியது. உடனே, மின்சாரத்தை சேமிப்பதற்காக, ஒரு டிரான்ஸ்பார்மரை உருவாக்கினேன்.

ரூபாய் நோட்டை கிழித்தால், சிலிக்கான் பிளேட் தெரியும். அதை சூரிய ஒளியில் வைத்து, மின்ஒயரால் டிரான்ஸ்பார்மருடன் இணைக்கும் போது, மின் உற்பத்தியானது. ஒரு, 500 ரூபாய் நோட்டில் இருந்து, 5 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். 15 நாட்களில் இத்திட்டம் ற்றியடைந்தது.இத்திட்டம் குறித்து, மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினேன். என்னுடைய கண்டு பிடிப்பால் கவரப்பட்ட, பிரதமர் அலுவலகம், திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மாநில அரசுக்கு பரிந்துரைத்தது.

கடந்த, 17ல், மாநில மின் வாரிய அதிகாரிகள், மின் உற்பத்தி திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு லக்மண் கூறினான்.

No comments:

Post a Comment

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps  Diabetes management often feels like a battle due to common life...