Tuesday, May 23, 2017

முதல் பயணத்தை துவக்கியது 'தேஜஸ்'

பதிவு செய்த நாள்22 மே 2017  22:23



மும்பை: அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'தேஜஸ்' என்ற, புதிய எக்ஸ்பிரஸ் ரயில், மும்பையில் இருந்து கோவாவுக்கு தன் முதல் பயணத்தை துவக்கியுள்ளது. முழுவதும், 'ஏசி' வசதி, 'வை - பை' உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய, தேஜஸ் என்ற புதிய ரயில் அறிமுகம் செய்யப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மும்பை - கோவா இடையே, முதல், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலை, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நேற்று துவக்கி வைத்தனர்.மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் இயக்க வாய்ப்புள்ள இந்த ரயில், முதல்கட்டமாக, 150 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும்; மும்பையில் இருந்து கோவாவை, ஒன்பது
மணி நேரத்தில் அடைய முடியும். இதன் மூலம், ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட வேகமான ரயிலாக, தேஜஸ் விளங்கும்.மும்பை - கோவாவைத் தொடர்ந்து, டில்லி - சண்டிகர், சூரத் - மும்பை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயிலின் முக்கிய அம்சங்கள்

l எல்.இ.டி., திரைகள், வை - பை வசதி உள்ளது
l டீ, காபி மிஷின்கள் உள்ளன
l 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா, அதிநவீன தீயணைப்பு சாதனங்கள் உள்ளன
l 'தண்டவாளத்தில் செல்லும் விமானம்' என, அழைக்கப்படும் இந்த ரயில், தானியங்கி கதவுகளை கொண்டது
l சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட, 20 சதவீத கூடுதல் கட்டணம்; விமானத்தை விட குறைவு
l எக்சிகியூடிவ் பெட்டிக்கான கட்டணம், உணவுடன், 2,680 ரூபாய்; உணவில்லாமல், 2,525 ரூபாய்; 'ஏசி' சேர்கார் பெட்டிக்கான கட்டணம், உணவுடன், 1,280 ரூபாய்; உணவில்லாமல், 1,155 ரூபாய்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025