காஞ்சீபுரம் வைகுண்டபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மே 22, 2017, 04:15 AM
காஞ்சீபுரம்,
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது காஞ்சீபுரம் வைகுண்டபெருமாள் கோவில். இந்த கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று அதிகாலை வைகுண்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு விசேஷ அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றினார்கள்.
அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷம் எழுப்பினார்கள். சாமி திருவீதி உலாவும் நடந்தது.கருட சேவை
நாளை (செவ்வாய்க்கிழமை) முக்கிய விழாவான கருட சேவை நடைபெறுகிறது. 29–ந்தேதி காலை தீர்த்தவாரி, இரவு புண்ணியகோடி விமானம், 30–ந்தேதி காலை சாந்தி திருமஞ்சனம், இரவு சப்தாவர்ணம், ஜூன் மாதம் 2–ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ராமகிருஷ்ணன், கோவில் ஆய்வாளர் சுரேஷ்குமார், மேலாளர் சதர்சனம் ஆகியோர் செய்து வருகின்றனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment