Tuesday, May 23, 2017

சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அதிகரிக்க எம்.சி.ஐ., நடவடிக்கை
பதிவு செய்த நாள்22மே2017 22:01

'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' முதுநிலை படிப்புகளுக்கான இடங்களை, மத்திய அரசு அதிகரிக்க உள்ள நிலையில், அதற்கான தகவல்களை வழங்க, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அறிவுறுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புகளில், இதயம், ரத்தம், மருந்து, புற்றுநோய் சம்பந்தமான படிப்புகள், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' வகையைச் சேர்ந்தவை. இத்துறைகளில், சிறப்பு நிபுணத்துவம் பெறுவதற்கான, முதுநிலை படிப்புகளை படித்தோருக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

 ஆனால், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இப்படிப்புகளுக்கான இடங்கள், குறைவாகவே உள் ளன. இதை கருத்தில் கொண்டு, சூப்பர் ஸ்பெஷாலிட்டியில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., - சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் உள்ள, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி, முதுநிலை மருத்துவப் படிப்பில், இடங்களை கூடுதலாக்க விரும்பினால், தேவையான கூடுதல் இடங்கள், அதற்கான வசதிகள் குறித்த தகவல்களை, மே., 23க்குள் நேரில், சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025