Tuesday, May 23, 2017

தண்ணீர் கேட்டால் செருப்படி: இப்படியும் ஒரு கிராமம்
பதிவு செய்த நாள்23மே2017 00:16

விருதுநகர்,: 'நம்நாடு வல்லரசாகும் நாள் வெகு துாரத்தில் இல்லை' என மேடைதோறும் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் மார்தட்டுகின்றனர். அந்த கனவு நிறைவேறுகிறதோ இல்லையோ... ப்பாவிகளானபொதுஜனங்கள் வாய்மூடி கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

பட்டியல் நீ...ளும்: தலைநகர் முதல் கடைக்கோடி கிராமம் வரை அடிப்படை வசதிகளில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே 'வல்லரசு கனவு' சாத்தியம். ஆனால், அப்படியா இருக்கிறது தமிழகத்தின் கிராமங்கள்? குடிநீர் கிடைக்காத கிராமம், கழிப்பறை இல்லாத கிராமம் என வரிசைப்படுத்தி பாருங்கள்... அடிப்படை வசதிகள் போல, அந்த பட்டியலும் நிறைவடையாது.
இதுவே சாட்சி: நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், குடிநீருக்காக அவலப்படும் கிராமங்கள் பல உண்டு என்பதற்கு, நம் கண்முன் உள்ள சாட்சி, விருதுநகர் கோட்டூர் அடுத்த அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி.

இக்கிராமத்தினர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில், '10 நாட்களுக்கு ஒரு முறை, எட்டு குடங்களே தான் குடிநீர் வருகிறது. ஊராட்சியில் 10குடிநீர் தொட்டிகள் இருந்தும், ஒன்று கூட செயல்படவில்லை. குடிநீர் கிணற்றில்
குப்பை நிறைந்து கிடக்கிறது. தெருவிளக்குகள் எரியவில்லை. அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கிணற்றை துார்வாரினால் குடிநீர் பிரச்னை ஓரளவு தீரும்' என குறிப்பிட்டிருந்தனர்.

செருப்படி:சித்ரா என்பவர் கூறுகையில், ''குடிநீர் கேட்டு என் கணவர் ஊராட்சி அலுவலகத்தில் முறையிட சென்றார். அங்கிருந்த சிலர், என் கணவரை செருப்பால் அடித்து மிரட்டினர். அடிப்படை வசதிகள் கேட்டால் அடிக்கிறாங்க, இல்லைனா பணம் கேட்கிறாங்க,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025