ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா ரயில்
பதிவு செய்த நாள்22மே2017 22:13
சென்னை: வட மாநிலங்களில் உள்ள சக்தி பீட திருத்தலங்களுக்கு, இந்திய ரயில்வே உணவு சுற்றுலாக் கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., 12 நாட்களுக்கான சுற்றுலா சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
மதுரையில் இருந்து, ஜூன், 12ல் புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை வழியாக, உ.பி., செல்கிறது. அங்குள்ள, அலகாபாத் அலோபிதேவி, காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர் கோவில்கள்; பீஹாரில், கயா மங்களா கவுரிதேவி கோவில்; அசாமில், காமாக்கியாதேவி கோவிலுக்கு செல்லலாம்.மேற்கு வங்கத்தில், கோல்கட்டா காலிகா தேவி; ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள விமலாதேவி, ஜெகநாதர் கோவில் மற்றும் கோனார்க் சூரியனார் கோவில்களுக்கும் சென்று வரலாம். இந்த, 12 நாட்கள் சுற்றுலாவிற்கு, 11 ஆயிரத்து, 775 ரூபாய் கட்டணம். மத்திய, மாநில, அரசு ஊழியர்களுக்கு, சலுகை உண்டு. மேலும் தகவல் பெற, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள மையத்திற்கு, 90031 40681, 90031 40655 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment