Sunday, May 7, 2017

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., இடங்கள்1.90 லட்சம் பேர் விண்ணப்பம்

பதிவு செய்த நாள் 06 மே 2017  19:34

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி யில் உள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 1.90 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் உள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இந்தாண்டிற்கான ஜிப்மர் நுழைவுத் தேர்வு, ஜூன், 4ல், 75 நகரங்களில், காலை, 10:00 - 12:30 மணி வரையிலும், பிற்பகல், 3:00 - 5:30 மணி வரையும் இரு பிரிவாக நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம், மார்ச், 27ல் துவங்கி, 3ம் தேதியுடன் முடிந்தது.

மொத்தமுள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து, 1.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு எம்.பி.பி.எஸ்., சீட்டிற்கு, 948 மாணவர்கள் வீதம் விண்ணப்பித்து உள்ளனர்.
கடந்தாண்டை காட்டிலும், 52,262 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதால், நுழைவுத் தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

'ஹால் டிக்கெட்' ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தபாலில் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. www.jipmer.edu.in என்ற இணையதளத்தில், வரும், 22ம் தேதி காலை, 10:00 மணி முதல், டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஜூன், 4 வரை, ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

BHOPAL NEWS