Saturday, May 13, 2017

நீதிபதி கர்ணன் கோரிக்கை : சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு

புதுடில்லி: 'நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெற முடியாது' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

கோர்ட் அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை கைது செய்ய, கோல்கட்டா போலீசார் தமிழகம் வந்தனர். எனினும், அவர் இருக்கும் இடம் தெரியாததால், இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்ப பெறக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. 'நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்ப பெற முடியாது' என, கோர்ட் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவர் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025