ஜினியின் பிரம்மாஸ்திரம் பலிக்குமா?
By DIN | Published on : 21st May 2017 05:42 AM

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பெரும்பாலான தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அது உண்மையான வரவேற்பா, இல்லை, வேறு வழியில்லாமல் வெளியிடும் அறிக்கையா என்று தெரியவில்லை.
ஜெயலலிதாவின் மறைவு, முதுமை காரணமாக செயல்பட முடியாமல் கருணாநிதி வீட்டில் இருப்பது போன்ற காரணங்களால் அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தித் தாங்கள்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று அரை டஜனுக்கும் மேலான தலைவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
அதிர்ச்சி காரணமாக எதிர்ப்பு? 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதுபோல் கனவு கண்டவர்கள் இருக்கவே செய்தனர் என்றாலும், தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தால் தங்கள் கனவு பலித்து விட்டதாகவே கருதி, பலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களின் கனவுகளைக் கலைக்கும் வகையில் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான சமிக்ஞையை தெளிவாகவே கொடுத்துள்ளார். இதில், முதல்வர் கனவில் உள்ள பல தலைவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ரஜினியை எதிர்ப்பதற்கும் தயாராகி வருகின்றனர். அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம் என்று கூறியுள்ள ரஜினியும் அவர்களைச் சந்திக்கத் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சந்திப்பு அரசியல்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் அவரது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்வு எந்த வகையிலும் சாதாரணமானது அல்ல. இது அரசியலுக்காக ஆழம் பார்க்கும் ஒரு நிகழ்வு. கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக இதற்காக ரஜினியும் அவரது ரசிகர் மன்றத்தினரும் உழைத்துள்ளனர். 1998-ஆம் ஆண்டுக்கு முன்னால் ரசிகர் மன்றம் தொடங்கியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.
ரசிகர் மன்றத்திலிருந்து 1,000 பேர் சந்திக்க அனுமதி கேட்டால், 300 பேர் மட்டுமே சந்திக்க அழைக்கப்பட்டனர். 1998-ஆம் ஆண்டுக்கு முன் மன்றம் தொடங்கியவர்கள் அப்படியே நிலைகுலையாமல் இருக்கிறார்களா என்பதை அறிவதற்காகவும், அவர்களின் ஆதரவு இருந்தால் கட்சி தொடங்கும்போது பலமிக்கதாக அது அமையும் என்றும் கணித்துதான் அவர்களை அழைத்து ரஜினி பேசியுள்ளார்.
ரசிகர்களின் நம்பிக்கை: இளைஞர்களின் வாக்குகளும் ஆதரவுகளும் யாருக்கும் நிலையாக கிடைத்ததில்லை என்பதைக் கடந்த கால அரசியல் களங்கள் நிரூபித்திருகின்றன. இதை உணர்ந்துதான் ரஜினி செயல்பட முற்பட்டுள்ளார். அதனால், இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்கின்றனர் அவரைச் சந்தித்த ரசிகர்கள்.
வருவது உறுதி: 1996-இல் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவுடனான மோதலால் திமுக - தமாகா கூட்டணிக்கு ரஜினி ஆதரவு கொடுத்த காலகட்டத்தில் இருந்து ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு இருப்பது உண்மைதான். இதை வைத்து ரஜினியைக் கேலி செய்பவர்கள் பலர் உண்டு.
ஆனால், ரஜினியின் உண்மையான முகத்தை அறியாதவர்கள்தான் கேலி பேசுவர்கள். தனிக் கட்சி தொடங்கி ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும், எல்லாக் காலத்திலும் அவர் அரசியலில் ஏதாவது ஒரு வகையில் பங்கேற்றுள்ளதுடன், பலருக்கு ஆலோசனைகளைத் தெரிவித்தும் வந்துள்ளார்.
வைகோவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது... 1993-இல் திமுகவில் வைகோவுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் அவரைத் தனிக் கட்சி தொடங்கக் கூறியவர்களில் ரஜினியும் ஒருவர். இதற்காக வைகோவுடன் ரஜினி பல மணி நேரம் பேசியதாக வைகோ கூட்டங்களில் தெரிவித்திருக்கிறார். அதைப் போல மு.க.அழகிரிக்கு திமுகவில் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் ரஜினியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிகூட ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக ரஜினி வெளிப்படையான ஆதரவைத் தெரிவிக்காவிட்டாலும், மறைமுக ஆதரவை, தர வேண்டியவர்களுக்கு தந்தார் என்பதுதான் உண்மை. இதனால் பலர் வெற்றி அடைந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
கருணாநிதி மீது மதிப்பு: கருணாநிதி மீது ரஜினி எப்போதும் தனி மதிப்பு கொண்டவராக இருந்துள்ளார். ஜெயலலிதாவை முதலில் எதிர்த்தாலும், பிறகு தைரியலட்சுமி என்று புகழும் நிலைக்கு அவர் மீதான ஆதரவு நிலைப்பாட்டிலும் இருந்தார். அதனால் அந்த இரண்டு தலைவர்களின் தலைமை உள்ள வரை அரசியலில் களம் இறங்குவது பற்றி ரஜினி விரும்புவில்லை. ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல.
தலைவர்கள் இல்லாததால்... தமிழக அரசியலில் எல்லாத் தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் பொதுவான தலைவர்கள் இப்போது இல்லை. வெகு சில தலைவர்களைத் தவிர பிற தலைவர்களை அவர்கள் சார்ந்திருக்கக்கூடிய சமுதாயப் பின்னணியுடன்தான் அணுக வேண்டி உள்ளது. ரஜினி மீது இப்படியொரு பார்வை இல்லை. அவர் அனைத்து ஜாதி, மதங்களுக்கும் பொதுவானதாக இருப்பது அவருடைய தனி பலம். இதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ரஜினிக்கு நல்லதொரு தருணமாக தற்போதைய அரசியல் சூழல் அமைந்துள்ளது. அதனால் ரஜினியும் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். போருக்கு (தேர்தலுக்கு) தயாராக இருங்கள் என்று ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதன் பின்னணி இதுதான்.
போருக்கு முன்... உடனடியாக இப்போதே ரஜினியால் கட்சியைத் தொடங்கி முன் எடுத்து நடத்த முடியாது. அவர் நடிப்பில் 2 படங்கள் வெளிவர வேண்டியள்ளது. பாமகவுடனான கசப்பால் பாபா படத்தில் எழுந்தது போன்ற பிரச்னை, பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளிவரும் படங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதால் தேர்தல் நேரத்தில்தான் அவர் கட்சியைத் தொடங்க உள்ளதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ரஜினி அரசியலுக்கு இப்போதே வந்துவிட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் வந்தால், அவர் மீதான விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து விடுவார்களோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். அதனால், ரஜினியை இப்போதே அரசியலுக்கு இழுக்கும் வகையில் விமர்சிக்கவும் தொடங்கியுள்ளனர்.
நல்ல மருத்துவர்தான் தேவை: தமிழகத்துக்கு நல்ல நடிகர் தேவையில்லை, நல்ல மருத்துவர்தான் தேவை என்று அன்புமணி ராமதாஸ் முதல் விமர்சனத்தை தொடுத்துள்ளார்.
நடிகராக எத்தனை படத்தில் வேண்டுமானாலும் நடியுங்கள், ரசிக்கிறோம். ஆனால், தமிழர்களை ஆள வேண்டும் என்ற நினைப்பு சரியாக இருக்காது என்று சீமான் கொதித்துள்ளார்.
திமுக எதிர்க்காதது ஏன்? ஆனால், திமுகவிலிருந்து மட்டும் எதிர்ப்புக் குரல் எழ இல்லை. திமுக, ஒருவர் களம் காணும் வரை எப்போதுமே யாரையும் நேரடியாக எதிர்ப்பது இல்லை.
திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் துரைமுருகன் ரஜினியை சரமாரியாக விமர்சனம் செய்ததாக செய்தி வந்தது. உடனே, அதற்கு துரைமுருகன் மறுப்புத் தெரிவித்தார்.
அதற்காக அரசியலுக்கு ரஜினி வந்தால் திமுக விமர்சனம் வைக்காது என்று சொல்ல முடியாது. இப்போதே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் திமுகவின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
"விஜயகாந்த்துக்கு இருந்த செல்வாக்கு அரசியல் களத்துக்கு வந்த பிறகு படிப்படியாக குறைந்து போனது. அதுபோல நடிகராக இருக்கும் வரையே ரஜினிக்கு செல்வாக்கு இருக்கும். களத்துக்கு வந்துவிட்டால், தாக்குப் பிடிக்க முடியாது' என்று திமுகவின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு இப்போதே வரவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் எண்ணுவதற்கான நோக்கம் வேறு மாதிரியாக இருந்தாலும், போர்க்களம் போல தேர்தல் களத்தில் கடைசி நேரத்தில் தயாராகி வெற்றியைப் பெற்றுவிட முடியாது என்பது ரஜினிக்கும் நன்றாகவே தெரியும். அமைப்பு ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கான திட்டங்களை ரஜினி இப்போதே தனக்கு மிகவும் நெருக்கமானவர்களை பயன்படுத்தி உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
ரஜினி ஏற்கெனவே 1996-ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகான நாடாளுமன்றத் தேர்தல்களில் தனது அஸ்திரங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் இன்னும் தனது நேரடி தலைமை என்கிற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தவில்லை. ரஜினியின் அந்த பிரம்மாஸ்திரம் பலித்துவிடக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது மனதிற்குள் வேண்டிக் கொள்கிறார்கள்.
அவர் நல்லவனுக்கு நல்லவனாக இருக்கப் போகிறாரா? இல்லை, "நான் நெருப்புடா' என்று பாயும் புலியாக சீறப் போகிறாரா?

No comments:
Post a Comment