Sunday, March 18, 2018

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் மேல்முறையீடு செய்தாலும் பணி நீக்கம் செய்யலாம்: ஐகோர்ட் உத்தரவு

2018-03-18@ 01:24:00



சென்னை: ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் மேல்முறையீடு செய்திருந்தாலும் பணி நீக்கம் செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றியவர் எஸ்.பி.சிதம்பரம். இவர் மீதான ஊழல் வழக்கில், அரியலூர் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ₹25 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2016 பிப்ரவரி 25ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவரை பணி நீக்கம் செய்து பொதுப்பணித்துறை செயலாளர் கடந்த 2017 டிசம்பர் 4ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சிதம்பரம் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், சிறை தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், என்னை பணி நீக்கம் செய்தது விதிகளுக்கு முரணானது என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி டி.ராஜா விசாரித்து, மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் அவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், சிறை தண்டனையை மட்டுமே உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. தண்டனை என்பது மேல்முறையீட்டின் ஒரு அங்கம்தான். எனவே, அவரை பணி நீக்கம் செய்தது சரிதான். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...