Sunday, March 18, 2018

வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா



2018-03-18@ 01:38:46




சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா மார்ச் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா மார்ச் 21ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் நடைபெறுகிறது. ெதாடர்ந்து அன்றிரவு 9.30 மணியளவில் வெள்ளி ரிஷப வாகன திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 22ம் தேதி காலை 5.15 மணியளவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றிரவு 10 மணியளவில் அம்மை மயில் வடிவம் சிவ பூஜை நடக்கிறது. தொடர்ந்து புன்னை மரம், கற்பக மரம், வேங்கை மரம் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருகிறார். தொடர்ந்து 23ம் தேதி காலை 8.30 மணிக்கு சூரிய வட்டம்,

இரவு 9 மணிக்கு சந்திரவட்டமும், 24ம் தேதி காலை 6 மணிக்கு அதிகார நந்தி காட்சியளித்தலும், 25ம் தேதி தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், இரவு 9 மணியளவில் நாகம், காமதேனு, ஆடு வாகனங்கள் வீதி உலா நடக்கிறது. 26ம் தேதி சவுடல் விமானமும், அன்றிரவு 9 மணியளவில் வெள்விடை பெருவிழா காட்சி நடக்கிறது. 27ம் தேதி பல்லக்கு விழாவும், ஐந்திருமேனிகள் யானை வாகனங்களில் சுவாமி வலம் வருகிறார். பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்திருவிழா மார்ச் 28ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதன்பிறகு தேரிலிருந்து இறைவன் திருக்கோயிலுக்குள் எழுந்தருளிகிறார். தொடர்ந்து 29ம் தேதி மாலை 3.30 மணியளவில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சியளிக்கிறார். மார்ச் 30ம் தேதி ஐந்திருமேனிகள் விழா, மாலை 6.30 மணியளவில் இறைவன் இரவலர் கோல விழா நடக்கிறது. 31ம் தேதி திருக்கூத்த பெருமான் திருக்காட்சி அளிக்கிறார்.

தொடர்ந்து தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 6.30 மணியளவில் திருகல்யாணம் நடக்கிறது. அதன்பிறகு கொடியிறக்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதி உமா மகேஸ்வரர் தரிசனமும், தொடர்ந்து அன்றிரவு பந்தம் பறி விழா நடக்கிறது. ஏப்ரல் 2ம் தேதி விழா நிறைவு திருமுழுக்கு நடக்கிறது.
பங்குனி பெருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. பங்குனி பெருவிழாவையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மருந்தீஸ்வரர் கோயிலில் 20ம் தேதி தொடக்கம்: திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா வரும் 20ம்தேதி தொடங்குகிறது. அன்று கிராம தேவதையான செல்வியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 21ம்தேதி விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா, 22ம்தேதி இரவு 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா, 23ம்தேதி காலை 9 மணி அளவில் சந்திர சேகரர் சூர்ய பிரபையில் காட்சியளிக்கிறார். இரவு 8.30 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் காட்சி அருளுதல் நடக்கிறது. 10 மணிக்கு தியாகராஜர் வீதிஉலா நடக்கிறது. 24ம்தேதி காலை 6 மணிக்கு சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சி அருளுதல், இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் பூதவாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளுதல், இரவு 10 மணிக்கு தியாகராஜர், பார்த்தசாரதிக்கு காட்சி தருதல், 25ம்தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகரர் பிருங்கி முனிவருக்கு காட்சி தருதல் நடக்கிறது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...