Tuesday, March 20, 2018

ஆருஷி வழக்கில் மேல்முறையீடு : விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்

Added : மார் 20, 2018 01:53

புதுடில்லி: சர்ச்சைக்குரிய, ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு ஏற்றுள்ளது.

வழக்கு பதிவு : டில்லி அருகே, நொய்டா நகரில், பல் டாக்டர்களான, ராஜேஷ் தல்வார், அவரது மனைவி, நுபுர் தல்வார் மற்றும் அவர்களது மகள், ஆருஷி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த, 2008ல், தன், 14வது பிறந்த தினத்துக்கு சில நாட்களுக்கு முன், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ஆருஷி, மர்ம மான முறையில் இறந்து கிடந்தாள். அந்த வீட்டின் மேல் மாடியில், வேலைக்காரன், ஹேம்ராஜ் இறந்து கிடந்தான்.இந்த கொலைகளை, ஆருஷியின் பெற்றோர், ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் ஆகியோர், கவுரவத்துக்காக செய்ததாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், இருவரையும் நிரபராதி எனக்கூறி விடுதலை செய்தது.மனு தாக்கல்இந்நிலையில், ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., போலீசாரும், ஹேம்ராஜின் மனைவி, கும்கலா பஞ்சாடேவும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை, உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...