Tuesday, March 20, 2018

ரேஷன் பொருட்கள் வேண்டாம் என
அரசுக்கு விட்டு கொடுத்தால் கவுரவிப்பு 


20.03.2018

'ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என, அரசுக்கு விட்டு கொடுப்பவர்களை கவுரவப்படுத்தும் வகையில், அவர்களின் பெயர், புகைப்படத்தை, பொது வினியோக திட்ட இணையதளத்தில் வெளியிட, உணவு துறை முடிவு செய்துள்ளது.




தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; பருப்பு உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. அரிசி கார்டு வைத்திருக்கும் வசதியானவர்கள், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. அவர்கள், தங்கள் ஊழியர்களிடம், ரேஷன் கார்டை கொடுத்து, பொருட்கள் வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர்.

இதையடுத்து, ரேஷன் பொருட்களை வாங்க விரும்பாதோர், அவற்றை,அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதியை, உணவு துறை துவக்கியது. இதுவரை, 9,000 பேர், அரசுக்கு, ரேஷன் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். இந்நிலையில், ரேஷன் மானியத்தை, விட்டு கொடுப்பவர்களை கவுரவப்படுத்த, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்று கருதுப வர்கள்,tnpds.gov.in என்ற இணையதளத்தில், 'அட்டை வகையை மாற்ற' என்ற பகுதியை, 'கிளிக்' செய்து, பதிவிட்டு, அரசுக்கு விட்டுகொடுக்கலாம்.
சமையல் காஸ் சிலிண்டர் மானியம் வேண்டாம் என, மத்திய அரசுக்கு விட்டு

Advertisement கொடுக்கும் வாடிக்கையாளரின் பெயரை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு கவுரப்படுத்துகின்றன.

அதேபோல், ரேஷன் மானியத்தை விட்டு கொடுப்போரின் பெயர், புகைப்படத்தை, பொது வினியோக திட்டத்தின் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...