Wednesday, June 27, 2018


ஹரியானாவில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Added : ஜூன் 26, 2018 22:20 |




சண்டிகர்,:ஹரியானாவில், மருத்துவ கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், இடையில் அந்த படிப்பை விட்டு விலக மாட்டோம் என, 5 - 7.5 லட்சம் ரூபாய்க்கு, உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது, இங்குள்ள, மாநில மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையின், செய்தி தொடர்பாளர், நிருபர்களிடம் கூறியதாவது:மருத்துவ கல்லுாரிகளில், 2018 - 19 கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., மற்றும், பி.டி.எஸ்., படிக்கும் மாணவர்கள், இடையில் அந்த படிப்பை விட்டு செல்ல மாட்டோம் என, உறுதியளிக்கும் வகையில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு கையெழுத்திட்ட உத்தரவாத பத்திரம்,சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், எம்.டி., மற்றும், எம்.எஸ்., போன்ற உயர் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள், பாதியில் படிப்பை விடமாட்டோம் என உறுதியளிக்கும் வகையில், 7.5 லட்சம் ரூபாய்க்கு உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவில் சேரும் மாணவர் களுக்கும், இந்த விதி பொருந்தும். 

மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த பின், பாதியில் படிப்பை விட்டு செல்லும் மாணவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகள், வேறு மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கும் தடை விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...