Wednesday, June 27, 2018

மருத்துவ,'சீட்'டுக்கு வாரிய சான்றிதழ்

Added : ஜூன் 27, 2018 00:31

சென்னை: அரசு மருத்துவ கல்லுாரி கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மொத்தம், 5,657 இடங்கள் உள்ளன. இதற்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்து உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, எம்.பி.பி.எஸ்., - 10; பி.டி.எஸ்., படிப்பில், ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 'இந்த ஒதுக்கீட்டில் இடங்களை பெற, முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு என்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்' என, மருத்துவ தேர்வு குழு தெரிவித்து உள்ளது.

இது குறித்து, மருத்துவ தேர்வு குழு வெளியிட்ட அறிவிப்பு: விண்ணப்பத்தை அளித்த போது, மாவட்ட ராணுவ வீரர் வாரியத்தின் இணையதள சார்பு சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள், வரும், 28ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மருத்துவ மாணவர் தேர்வு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் அளிக்காதவர்கள், இட ஒதுக்கீடு கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...