Thursday, June 28, 2018

தேசிய செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடி அபராதம் விதிப்பு



பங்குகள் ஒதுக்கீட்டில் விதிமுறையை மீறி செயல்பட்டதாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதித்தது.

ஜூன் 28, 2018, 05:00 AM

மும்பை,
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி 2016–ம் ஆண்டு ஏப்ரல் 21–ந் தேதி பிறப்பித்த வழிமுறைகளுக்கு முரணாக வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக குழு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விதிமீறல் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு போனஸ் பங்குகளை ஒதுக்கீடு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய வழிமுறைகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பின்பற்ற தவறியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949–ன் பிரிவுகள் 47 ஏ (1) (சி) உடன் இணைந்த பிரிவுகள் 46(4) (1)–ன் படி தண்டனைக்குரிய குற்றம் என ரிசர்வ் வங்கி முடிவு எடுத்தது.

அதன்படி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...