Sunday, May 7, 2017

Post-Nirbhaya, rise in plaints on crime against women
New Delhi:


It has been more than four years since the Nirbhaya gang rape-murder case, but not much seems to have changed on the ground as figures on crimes against women show.
 
According to the data of National Crime Records Bureau (NCRB), while close to 35,000 rape cases were being reported every year from across the country since 2013, close to 1.4 lakh rapes cases were being tried in the courts by the end of 2015. Since 2012 when the Nirbhaya gang rape happened, there was a marked increase in the registration of cases relating to crimes against women across the country . While 24,923 rapes were reported in 2012, the figure was 33,707 in 2013, attributed to increased awareness and prompt registration of FIRs by police on complaints of women. The number of rape cases rose to 36,735 in 2014 out of which 2346 were gang-rapes. However, the numbers came down to 34,561 in 2015 including 2,113 gang-rapes.

The number of crimes against women continuously increased from 2011to 2014.While 2,28,650 cases were re ported in 2011, it went up to 2,44,270 cases in 2012. It went up sharply to 3,09,546 cases in 2013 and 3,37,922 in 2014.However, the number of cases declined to 3,27,394 cases in 2015.
NCRB data state that of the 34,651 rape cases registered in 2015, offenders were known to the survivors in 33,098 cases (95.5 percent). The conviction rate in crimes against women remains abysmal as reflected in the data released by NCRB.

According to NCRB, 10,80,144 cases of crimes against women were pending in trial courts by the end of 2015.In 2015, only 27,844 cases ended in conviction, a rate of 21.7%. In rape cases, out of 24,486 persons whose trial was completed that year, 7,185 people were convicted, 16,849 were acquitted and 452 discharged by the courts.

In 2014, 26,660 cases relating to crimes against women ended in conviction -a conviction rate of 21.3%. By the end of 2014, a total of 9,82,516 cases were pending for trial in the courts. The courts convicted 6,637 persons of rape, acquitted 16,575 and discharged 487 accused in rape cases in 2014.

Reddy had listed nearly Rs 300cr given as gratification
Chennai: 
 


Sand mining baron Sekhar Reddy's diary , now in the possession of I-T officials, is likely to give sleepless nights to the Edappadi Palaniswamy government. An I-T official said the department has sent to Tamil Nadu chief secretary Girija Vaidyanathan a letter with names of ministers, MLAs and senior members of the state bureaucracy based on diary notings made by Reddy on money disbursements running into several hundred crores of rupees.
 
The I-T report has sought action against ministers and officials, whose names fig ure in the diary . I-T sources told TOI that the diary, seized during raids on Reddy's residence last November, contained a mine of information on his “dealings“ allegedly with ministers and senior bureaucrats. Efforts to talk to government officials proved futile as they remained tight-lipped. “We sent a letter to the chief secretary with names of beneficiaries as mentioned in Reddy's diary . We wanted the government to take action against these people through its vigilance department,“ said a senior I-T official on the condition of anonymity .The department refused to mention the names against whom it sought action.

“The sand mining baron has meticulously listed more than `300 crore given to ministers, MLAs and senior bureaucrats as gratification for contracts and benefits received from the government,“ said the official. On Friday ED officials attached `37 crore worth of property and assets belonging to Reddy as he could not properly account the cash seized from his residence and other places after demonetisation was announced on November 8. I-T sleuths seized `140 crore in new `2,000 notes and old notes of `500 and `1,000.

“Based on Reddy's diary notings we conducted searches at residences and offices of former chief secretary Rama Mohana Rao and state health minister C Vijayabaskar. The raids on December 27, 2016 were conducted to corroborate the names mentioned by Reddy as recipients. Of the four recipients, three, barring Rao, accepted having financial dealings with Reddy ,“ said the official.

Vijayabaskar, the official said, was under I-T radar since Reddy's diary was seized. “The minister and his associates were on our watch list since Reddy and two others were raided,“ he said.
Unlike other beneficiaries, Reddy maintained a detailed account of the benefits he showered on the ministers, officials and others, including the private secretaries of ministers.



Govt doctors may bag most of PG seats with incentive marks
Chennai:


`80% of 3,000 Seats Will Go To Them' 
 
The protracted legal wrangle over admission procedure for postgraduate medical courses in Tamil Nadu has ended up in an unintended windfall for doctors in government service aspiring to study PG courses. Ironically, it was these in-service candidates who saw red in the Medical Council of India's (MCI) regulations and spearheaded a fight ­ both inside and outside court rooms.
“At least 80% of the 3,000odd PG seats would go to inservice candidates eligible to claim incentive marks as stipulated in Regulations 9(4) of the Postgraduate Medical Education Regulations, 2000,“ said a senior counsel privy to the legal battle. Non-service candidates, ho chose to remain silent who chose to remain silent spectators will be the worsthit, since they would get into the zone of consideration only if they score high without any incentive marks, he said.

Now that a tie-breaker judge, to whom the case was referred after a division bench delivered a split verdict, sailed with a judge who held state norms for PG medical admissions were untenable, the 50% quota for government doctors stands abolished. In effect, while the 50% reservation is gone, the incentive marks scheme for doctors in remote and difficult areas has survived. In other words, it can now be applied for the entire government quota seats, and not restricted to 50% reserved for in-service candidates alone.

Since MCI regulations contemplate award of upto 30% of a candidate's NEETPG marks as incentive, everyone with three years service in designated places will automatically be richer by 30% marks than non-service candidates. There is a hitch though. Incentive marks can be applied only if the candidate concerned clears NEET-PG by scoring the minimum required mark, and cannot be used to clear NEET-PG.

Unless a government doctor in remote and difficult areas fails to score minimum marks, nothing can stop him her from bagging a PG medical seat, say jurists. “At least a few hundred government doctors in this category would score the maximum mark of 1,500 this time. If the candidate scores 1,270 marks in NEET-PG, his total would go beyond the maximum mark, thanks to 30% weightage for his service in remote and difficult area,“ said a senior advocate.

Now that the high court has made it clear that it would not interfere with the state government's right to define the notified areas and public health centres in order to bring them under the eligibility bracket for incentive marks, government might name specific hospitals in city limits as `difficult'. For instance, an area like KK Nagar in Chennai could be defined as `difficult' as it witnesses intimidation and assault of doctors frequently . The government general hospital too could be termed difficult, for its sheer size of patient population, he said. As of now, this year's PG medical admissions will have a single merit list, but only in-service candidates will have the benefit of incentiveweightage marks.

NOTE FOR THIS NEET 2017

imggallery
No more 50% quota for govt docs in PG med admissions: HC
Chennai: 
 


Admissions to postgraduate medical courses in Tamil Nadu will not be the same again. The Madras high court on Saturday ruled that the state must follow only Medical Council of India regulations in awarding incentive marks to government service doctors. It also did away with the three-decade-old practice of reserving 50% of government quota seats to in-service candidates.
 
As a result, there will be no reservation for in-service candidates as contemplated in the prospectus, and marks cannot be awarded for each year completion of Compulsory Rotatory Residential Internship (CRRI). The pattern of awarding marks will also not be the state's discretion and Clauses 16 and 17 of the prospectus were ruled as being contrary to MCI regulations. The state, however, can define remotedifficult areas. Instead, in-service candidates in remote and difficult areas would be entitled to 10% of their NEET-PG marks a year as incentive, to a maximum of 30% of NEET-PG marks.

Justice M Sathyanarayanan, asked to rule on the issue after the April 3 split verdict by a two-judge bench, said: “The Indian Medical Council Act, 1956, and its various regulations, especially the Post Graduate Medical Education Regulation, 2000, are having primacy . The only leverage given to them (state) is to identify remote and difficult areas.“ Justice M Sathyanarayanan, asked to adjudicate on the issue after the April 3 split verdict by a two-judge division bench, said, “This court is of considered view that the Indian Medical Council Act, 1956, and various regulations framed thereunder, especially , the Post Graduate Medical Education Regulation, 2000, are having primacy .

Therefore, the appellants are bound to follow the same and the only leverage given to them is to identify the remote and difficult areas.“ As for identification of `hill remotedifficult areas' and non-inclusion of medical officers serving in `rural areas', the judge said he recorded the government stand that those serving in rular PHCs would be considered under the category . The SC had clearly held that Regulation 9 of the Post Graduate Medical Education Regulations, 2000, was a “complete code by itself and any law with regard to that will be beyond legislation competent of the state legislation,“ he said. Pulling up Tamil Nadu for ignoring statutory rules, regulations and Supreme Court orders, he said was seeking to “justify the stand on the ground of sentiments and sympathy . For the present piquant situation, they (state government) are alone to be blamed.“

He agreed with senior MCI counsel Vijay Narayan that despite repeated SC pronouncements on the primacy of MCI in medical education, some states chose to frame their own guidelines. Tamil Nadu's prospectus for this year's postgraduate medical education “is one such instance,“ Justice Sathyanarayanan said.

MCI has categorically said the benefit of proviso to Regulation 9 (IV) shall be available only to such in-service candidates who secured the minimum marks and qualified for NEET-PG test. Weightage in marks as an incentive for each year of service in remote andor difficult areas could be granted to deserving in-service candidates only after they secured minimum marks and cannot be provided to qualify the NEET-PG test.
கீழ்ப்பாக்கம் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பணியால் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்





சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.

மே 07, 05:00 AM

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதை மெட்ரோ ரெயில் நிறுவன ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.

6 அடி பள்ளம்

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கும் வகையில் நடந்து வருகின்றன. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் இருந்து, திருமங்கலம், அண்ணாநகர் வழியாக சென்னை சென்டிரல் வரையிலான மெட்ரோ ரெயில் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை, டெய்லர்ஸ் சாலை சந்திப்பு அருகே சாலையில் நேற்று காலை 7 மணியளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

சுமார் 6 அடி ஆழத்துக்கு உருவான அந்த பள்ளத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளம் ஏற்பட்டது காலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் திடீர் பள்ளத்தில் வாகனங்கள் ஏதும் சிக்கவில்லை. பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

நிரப்பப்பட்டது

திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, கான்கிரீட் கலவை மூலம் அந்த பள்ளத்தை நிரப்பும் பணி நடந்தது. சுமார் 3 மணி நேரம் இந்த பணி நடைபெற்று காலை 10 மணியளவில் அந்த பள்ளம் முழுமையாக நிரப்பப்பட்டது.

மேலும் பள்ளம் விழுந்த இடத்தின் மேல் இரும்பு தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தின் மேல் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கிறது.

திடீர் பள்ளமானது சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச் சுவர் பகுதியையொட்டி ஏற்பட்டதால், போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை. அதனால், சாலையில் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.

எனினும், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதாலும், பள்ளத்தை சீரமைக்கும் பணி காரணமாகவும் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

வாடிக்கையான ஒன்று

மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் அண்மை காலங்களில் தொடர் பள்ளங்கள் விழுவது, விரிசல்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்கின்றனர்.

கடந்த மாதம்(ஏப்ரல்) 9-ந் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் மாநகர பஸ் ஒன்றும், டாக்டர் ஒருவரின் காரும் கவிழ்ந்தது நினைவு கூரத்தக்கது.
தமிழகத்தில் 8 நகரங்களில் 88 ஆயிரம் பேர் இன்று ‘நீட் தேர்வு’ எழுதுகின்றனர் பெண்கள் புடவை அணிந்து வர தடை

தமிழகத்தில் 8 நகரங்களில் 88 ஆயிரம் பேர் இன்று ‘நீட் தேர்வு’ எழுதுகின்றனர் பெண்கள் புடவை அணிந்து வர தடை
 
தமிழகத்தில் உள்ள 8 நகரங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் நீட் தேர்வில் 88 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை, 

தமிழகத்தில் உள்ள 8 நகரங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் நீட் தேர்வில் 88 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். பெண்கள் புடவை அணிந்து வர தடை செய்யப்பட்டு உள்ளது.

‘நீட் தேர்வு’ 

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு) மூலம் நிரப்பப்படுகின்றன.

அந்தவகையில் பிளஸ்–2 படிப்பு முடித்த மாணவர்கள் 2017–2018–ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கு, நடப்பாண்டு முதல் ‘நீட் நுழைவு தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்வு எழுத நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடக்கிறது.

 தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள மையங்களில் நடக்கும் தேர்வில் 88 ஆயிரத்து 478 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பேனா வழங்கப்படும் 

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பகல் 1 மணி வரை நடக்கிறது. காலை 7.30 மணியில் இருந்து தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை 9.30 மணி முதல் 9.45 மணி வரை ஹால் டிக்கெட் சோதனை நடக்கிறது. 9.45 மணிக்கு உறையை பிரித்து, 10 மணிக்கு தேர்வை எழுதலாம்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு கூட அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அனுமதி அட்டையின் 2–வது பக்கத்தில் ஒட்ட அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வில் விடைகளை எழுத நீல நிறம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தேவையான பால்பாயிண்ட் பேனா தேர்வு அறையிலேயே வழங்கப்படும்.

720 மதிப்பெண்கள் 

தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என 4 பாடங்களில் தலா 45 கேள்விகள் வீதம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிபெண் வீதம் 720 மதிப்பெண் அளவிற்கு தேர்வு நடக்கிறது.

சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும் அது தவறான பதிவாக கணக்கிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 8–ந்தேதி வெளியாகிறது.

சேலை கட்டும் பெண்ணுக்கு அனுமதி இல்லை 

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள் பை ஆகிய எதையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட விதிவிதமான தங்க ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவைகளையும் தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை.

‘ஹாப் ஸ்லீவ்ஸ்’ என்ற அரை கை உடை, மெல்லிய ஆடைகளை

அணிந்து செல்ல வேண்டும். பெரிய பொத்தான், பேட்ஜ், பெரிய அளவிலான ரப்பர் பேண்டுகள், தலையில் அணியும் கிளிப்புகள், பூ போன்ற சிறப்பு அலங்கார ஆடைகளை அணிய கூடாது. சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வர வேண்டும்.

புடவை கட்டி வரும் பெண்கள், வளையல்கள், பர்தா, பைஜாமா குர்தா ஆகியவை அணிந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். மாணவர்கள் ஷூ, சாக்ஸ் முழுக்கை சட்டை, டி–சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர்கண்ணாடி போன்றவை அணிய கூடாது.

சாதாரண வகை பேண்ட், அரைக்கைசட்டை போன்ற ஆடைகளை மட்டும் அணிய வேண்டும்.

தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்தாலே அல்லது பயன்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதார் கார்டு அவசியம் 

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சிலர், விண்ணப்பங்களில் தங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்றி பதிவேற்றி உள்ளனர். இதனால் அவர்களுடைய ஹால் டிக்கெட்டுகளில் புகைப்படம் மாறி வந்துள்ளது.

அவ்வாறு வந்துள்ள மாணவர்கள் தங்களின் அசல் ஆதார் அட்டை அல்லது அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை தேர்வு அறைக்கு கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
பழநிக்கு போறீங்களா? ஆட்டோக்கள் ஜாக்கிரதை

பதிவு செய்த நாள் 06 மே2017 20:05

பழநி, பழநியில் சில ஆட்டோக்களில் பயணியரிடம் கட்டணக் கொள்ளை நடக்கிறது. ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் இருந்து, 2 கி.மீட்டரில் உள்ள மலைக்கோவிலுக்கு, 80 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
தற்போது கோடை விடுமுறையால் பழநி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி, ஆட்டோக்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.

 ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் இருந்து, 2 கி.மீட்டருக்குள் உள்ள மலைக்கோவிலுக்கு, 80 ரூபாய் வசூலிக்கின்றனர்.

ரயில் வரும் நேரங்களில், அரசு பஸ் பெயரளவுக்கு இயக்கப்படுவதால், வெளியூர் பயணியரிடம் இரவு நேரத்தில், 150 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
திருப்பதியில் உள்ளது போல, பழநி பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மலைக்கோவில் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன் வரை வேன்களை
இயக்கலாம்.

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு செல்ல கட்டணம் நிர்ணயித்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகார் தந்த பெண்ணிடம் போலீஸ் ஏ.சி., நக்கல்


பதிவு செய்த நாள் 06 மே2017 19:23

திருச்சி, 'எனக்கு நமீதா, நக்மா, ஜெயப்பிரதா ஆகியோரை பிடிக்கும். அவர்கள் கிடைக்கவில்லை என்பதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள முடியுமா' என்று தற்கொலைக்கு துாண்டிய வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீஸ் ஏ.சி., கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த பிரச்னை 

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் அனுராதா, 37. இவர் திருமணமாகி, தன் கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது சகோதரர்கள் மற்றும் தாயார் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் சொத்து பிரச்னையை பேசச் சென்ற அனுராதாவை, அவரது அம்மா நேரிலும், சகோதரர்கள் போனிலும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால், மனம் வெறுத்த அனுராதா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சைக்கு பின் அவர் உயிர் பிழைத்தார். அம்மா, சகோதரர்கள் திட்டி தன்னை தற்கொலைக்கு துாண்டியது குறித்து, அரியமங்கலம் போலீசில் அனுராதா புகார் அளித்தார்.
அதன்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், துணை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர், பொன்மலை உதவி கமிஷனர் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, கடந்த இரு நாட்களுக்கு முன் விசாரணை நடந்துள்ளது.

அப்போது, உதவி கமிஷனர் சுந்தர்ராஜன், பாதிக்கப்பட்ட அனுராதாவுக்கு எதிராக பேசியதோடு, 'எனக்கு கூட தான் நமீதா, நக்மா, ஜெயப்பிரதா ஆகியோரை பிடிக்கும். அவர்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ள முடியுமா' என்று கேட்டுள்ளார்.

என் கோட்டைஇதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுராதாவும், அவரது கணவரும், எதிர்த்து கேட்க, 'இது என் கோட்டை; இங்கு, நான் சொல்வதைத்
தான் கேட்க வேண்டும். கோர்ட்டுக்கு போய் பார்த்துக் கொள்; தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது' என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனுராதா, வழக்கறிஞர் மூலம் மீண்டும் துணை கமிஷனரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே, திருப்பூரில் மதுவுக்கு எதிராக போராடிய பெண்ணை, போலீஸ், ஏ.டி.எஸ்.பி., தாக்கிய பிரச்னை கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், உதவி கமிஷனர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சித்ரா பவுர்ணமி கிரிவலம் 2,140 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பதிவு செய்த நாள் 06 மே2017 19:21



சென்னை, சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்காக, திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, 2,140 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், பவுர்ணமி கிரிவலம் சிறப்பு வாய்ந்தது; அதிலும், சித்ரா பவுர்ணமி மிக சிறப்பானது. வரும், 10ம் தேதி, சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை, 12:10 மணி முதல், 11ம் தேதி, அதிகாலை, 03:04 மணி வரை, கிரிவலம் செல்ல, உகந்த நேரமாகும்.

அன்று, ௧௦ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், கிரிவலம் செல்ல வரலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளியூர்களில் இருந்து, திருவண்ணாமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம், சேலம், திருச்சி மற்றும் கும்பகோணம், அரசு போக்குவரத்துக் கழக கோட்டங்களில் இருந்து, 2,140 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்து, அங்கிருந்து, கிரிவலம் புறப்படும் இடத்திற்கு, சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் பாஸ்ட் ரயிலாகிறது கொச்சுவேளி எக்ஸ்பிரஸ்

பதிவு செய்த நாள் 06 மே2017 19:12

சென்னை, கர்நாடக மாநிலம், யஷ்வந்த்பூரில் இருந்து, சேலம், கோவை வழியாக, கேரள மாநிலம், கொச்சுவேளிக்கு, 'ஏசி' வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், வரும், ஆக., 31 முதல், சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படுகிறது. அதனால், ரயில் எண், நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

 இதற்காக, ஆக., 31 முதல், இந்த ரயில்களின் எண்கள், 22677 / 22678 என, மாற்றப்படுகின்றன. இந்த ரயில், யஷ்வந்தபூரில் இருந்து, வியாழன் தோறும், மாலை, 3:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 6:45 மணிக்கு கொச்சுவேளி சென்றடையும். கொச்சுவேளியில் இருந்து, வெள்ளி தோறும், மதியம், 12:50 மணிக்குபுறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு, யஷ்வந்த்பூர் சென்றடையும்.
ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்ஓங்கோலில் நிற்கும்

பதிவு செய்த நாள் 06 மே2017 19:10

சென்னை, சென்னை எழும்பூர் - ஜோத்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், ஓங்கோலில், நின்று செல்லும்.சென்னை எழும்பூரில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு, சனி தோறும், மாலை, 3:15 மணிக்கு, ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில், நேற்று முதல், ஆறு மாத காலத்திற்கு, சோதனை ரீதியில், ஆந்திராவில் உள்ள, ஓங்கோல் ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பணிக்கு திரும்பாத அரசு டாக்டர்கள்சட்டப்படி நடவடிக்கைக்கு கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 06 மே2017 22:53

சென்னை 'பணிக்கு வராத அரசு டாக்டர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.அரசு டாக்டர்கள், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வேலன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, 'போராட்டத்தை கைவிட்டு, டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்; இல்லையென்றால், சட்டப்படியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

டாக்டர்களை, கடவுளின் பிரதிநிதியாக, மக்கள் கருதுகின்றனர். நீங்களே போராட்டத்தை தொடர்ந்து நடத்தினால், ஏழை, எளிய மக்கள் எங்கு செல்வர்?
அரசு டாக்டர் ஒருவர், தன் வேலை நேரம் முடிந்து விட்டது; அடுத்த டாக்டர் பணிக்கு வரும் போது, அவரை அணுகும்படி, ஒரு நோயாளியிடம் கூறியுள்ளார். ஒரு டாக்டர், இவ்வாறு கூறுவது முறை தானா?
உங்கள் போராட்டம், காந்திய வழியில் இருக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்கக்கூடாது. உங்கள் போராட்டம், எந்த வகையிலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதையோ, அறுவை சிகிச்சை மேற்கொள்வதையோ பாதிக்கக்கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் ராஜகோபாலன், ''இந்தப் பிரச்னையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என, நாங்கள் நேர்மையாக முயற்சிக்கிறோம்,'' என்றார்.

இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் தாக்கல் செய்த மனுவில், நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் போராடுவதாக கூறப்பட்டுள்ளது. எந்த பிரச்னையும் இன்றி, நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பர் என, இந்த நீதிமன்றம் நம்புகிறது. பணிக்கு திரும்பாத டாக்டர்களை பொறுத்தவரை, சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொழில் குற்றமல்ல குஜராத் ஐகோர்ட் கருத்து

பதிவு செய்த நாள் 06 மே2017 22:48

ஆமதாபாத்,: 'பலவந்தப்படுத்தாதவரை, பாலியல் தொழிலை குற்றச் செயலாக கருத முடியாது' என, குஜராத் ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.டில்லியில், 2012ல், மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு கடுமையாக்கப்பட்டு உள்ளன. இதன்படி, பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளரும், குற்றம் செய்தவராக தான் கருதப்படுகிறார்.
முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்தவர், வினோத் படேல்; சமீபத்தில், பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு சென்றார். அப்போது, போலீசார் அதிரடி சோதனை நடத்தி, படேல் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர். படேல் மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்தனர்.

இதை எதிர்த்து, குஜராத் ஐகோர்ட்டில், படேல் மனு தாக்கல் செய்தார்.அதில், 'நான் பாலியல் தொழிலாளியுடன் இருக்கும் போது, போலீசார் என்னை கைது செய்யவில்லை. அங்கு காத்திருந்த போது தான் கைது செய்தனர். அதனால், நான் எந்த குற்றமும் செய்யவில்லை. பலவந்தப்படுத்தியோ, பணத்தாசை காட்டியோ,
பாலியலில் ஈடுபடவில்லை' என, கூறியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி, ஜே.பி.பர்டிவாலா முன்னிலையில் நடந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி கூறியதாவது:

பாலியல் தொழிலில், சுய விருப்பத்தின்படி ஈடுபடுபவர்கள் மீது, குற்ற வழக்கு பதிவு செய்யக் கூடாது. ஏனெனில், விருப்பத்தின் பேரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல. மாறாக, வலுக்கட்டாயமாகவோ, மிரட்டியோ, பணத்தாசை காட்டியோ, ஒருவரை, பாலியல் தொழிலில்
ஈடுபடுத்துவது தவறு.இந்த வழக்கில் தொடர்புடைய மனுதாரருக்கு, பாலியல் தொழில் நடத்திய வர்களுடன், எந்த தொடர்பும் இல்லை; அதை வைத்து சம்பாதிக்கவும் இல்லை. அதனால், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள, பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
மது குடித்த எலிகள்: பீஹார் போலீசார் 'காமெடி'

பதிவு செய்த நாள் 06 மே2017 22:47



பாட்னா, பீஹாரில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த, ஒன்பது லட்சம் லிட்டர் மது பானங்களை, எலிகள் குடித்து விட்டதாக, உயர் அதிகாரிகள் கூட்டத்தில், போலீசார் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், ஆர்.ஜே.டி., எனப்படும் லாலு பிரசாத்தின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், பீஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

எனினும், அரசின் உத்தரவை மீறி, பல இடங்களில் மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதை தடுக்கும் வகையில், மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தி, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சொந்தமான கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை அழிப்பது தொடர்பாக, கோர்ட் மற்றும் மாநில அரசிடம் அனுமதி பெறுவது குறித்து, போலீஸ் அதிகாரி களின் கூட்டம் நடந்தது. அப்போது, உயர் அதிகாரி
களிடம், தங்கள் அறிக்கையை சமர்ப்பித்த போலீசார், கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த மதுவில் பெரும்பாலான அளவு, எலிகள் குடித்ததால், காலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, ஒன்பது லட்சம் லிட்டர் மதுபானங்கள் எலிகள் குடித்ததில் தீர்ந்து விட்டதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மது பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளை ஆய்வு செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் கவரில் டீ, பால், சாம்பார் வழங்க தடை: தி.மலையில் அதிரடி

பதிவு செய்த நாள் 07 மே2017 01:23

திருவண்ணாமலை 'டீ, பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவு பொருட்களை, பிளாஸ்டிக் கவரில் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருவண்ணாமலை கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஓட்டல்கள், டீ கடைகள் மற்றும் பேக்கரிகளில், சமைத்த உணவை வழங்குவதற்கு அச்சிட்ட காகிதங்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதில் காரீயம், காட்மியம் போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. அவை உணவு பொருட்களில் கலந்து புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, மூளை நரம்பு பாதிப்புகள் மற்றும் ஜீரண குறைபாடுகளை உருவாக்குகிறது.

அச்சிட்ட காகிதங்களில் பொட்டலம் மடிப்பதை, உணவு பாதுகாப்பு மற்றும் தர
நிர்ணய ஆணையம் தடை செய்துள்ளது. எனவே, வாழை இலை, பாக்குமட்டை, தேக்கு இலை போன்ற இயற்கையான மக்கும் தன்மையுள்ள பொருட்களில் பொட்டலமிட வேண்டும். மேலும் டீ, பால், சாம்பார், ரசம், போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் வழங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கவர்களில், சூடான உணவுகளை வழங்குவதால் புற்றுநோய் ஆபத்து ஏற்படும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்
படுத்துவது கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நிழற்கூரை அமைக்கும் பணி துவக்கம்

பதிவு செய்த நாள் 06 மே
2017
20:04



நாமக்கல், நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக நிழற்கூரை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. குடைவரை கோவிலான நரசிம்மர் கோவிலின், உப கோவிலான இங்கு, சுவாமி தரிசனம் செய்ய, உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, நரசிம்மர் கோவிலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

அதனால், பக்தர்கள் சிலர், தங்களது சொந்த செலவில் நிழற்கூரை அமைக்க
முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
அதில், சக்கரங்களுடன் கூடிய இரும்பு ஆங்கிள் பதித்து, மேற்கூரையாக கூல் தகடு பொருத்தப்பட்டது. ஒரு கூரைக்கு, 16 ஆயிரம் ரூபாய் வீதம், 21 நிழற்கூரைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் துவங்கி
உள்ளது.

தற்போது, 10 கூரைகள் அமைக்கப்பட்டு உள்ளன; மேலும், 11 கூரைகள் தயாரிக்கப்படுகின்றன. விரைவில், நரசிம்மர் கோவில் வரையிலும் முழுமையாக நிழற்கூரை அமைக்கப்படும்.
சித்ரா பவுர்ணமி: தலைகளால் நிறையும் கிரி மலை!

பதிவு செய்த நாள் 07 மே 2017 02:06



 இறைவனின் உறைவிடமா, இயற்கையின் மறைவிடமா என்று ஒரு கணம் யோசிக்க வைக்கிறது அந்த எழில் வனம்;

பனித்துளியின் ஈரத்தோடு, பச்சை போர்த்திக் கொண்டுள்ள மலையின் மீது, இச்சை கொள்கிறது மனம்; கண்களுக்குத் தெரியாத காற்றிலே கலந்து, இதயத்தின் ஆழம் வரை பரவுகிறது கற்பூரத்தின் மணம்; கடவுளே கரம் பிடித்து அழைத்துச் செல்வது போல, உச்சி மலையை நோக்கி உற்சாகமாய்ச் செல்கிறது பக்த ஜனம்; அது தான், சித்தர்களும், பக்தர்களும் தென் கயிலையைத் தேடிவரும் சித்ரா பவுர்ணமி தினம்.

'எழில் வளர் கொங்கு நாட்டில் தக்கமேற்றிசையின் எல்லை முடிவினில் தயங்கா நிற்கும்' என்று பேரூர்ப்புராணத்தில் பாடப்படும் தென் கயிலை என்ற தட்சிண கயிலை வெள்ளியங்கிரி மலையின் சிறப்பு, அதையும் விட உயரமானது. சுயம்புவாய் ஈசன் வீற்றிருக்கும் இந்த உச்சி மலைக்கு, ஆண்டு முழுவதும் செல்வது சாத்தியமில்லாதது. அதனால் தான், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தில், ஒரே இரவில் ஒரு லட்சம் பக்தர்கள், மலையேறும் ஆன்மிக அதிசயம் அமைதியாய் நிகழ்கிறது.

கோவையிலிருந்து 35 கி.மீ., துாரத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது வெள்ளியங்கிரி மலை. அதன் அடிவாரத்தில் துவங்கி, ஏழு மலைகளைக் கடந்து, ஐந்தரை கி.மீ., துாரத்தில், ஆறாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது கிரி மலை. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், மலை ஏறுவது வழக்கம். கடுங்குளிர், வழுக்கும் பாறைகள், வன விலங்குகள் நடமாட்டம் என, இந்த மலைப்பயணம், பல சவால்களைச் சந்திக்கக் கூடியது.

ஆனால், ஒவ்வொரு மலையைக் கடக்கும்போதும், ஓய்வெடுக்க வேண்டுமென்ற உணர்வை விட, உற்சாகத்தோடு வேகமாய் ஏறத் துாண்டுவதே, இந்த ஆன்மிகப்பயணத்தின் அற்புதம். வழியில் பல நீர்ச்சுனைகளில் தீர்த்தம் அருந்தி, புல்வெளியிலும், பாறையிலும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, உறவுகளோடும், நட்போடும் விடிய விடிய மலையேறுவது என்பது, வேறெங்கும் கிடைக்காத பரவசமூட்டும் பக்தி அனுபவமாகும்.

பிப்.,1ல் துவங்கி, மே 31 வரையிலான நான்கு மாதங்களுக்கு மட்டுமே, இந்த மலைக்குச் செல்ல, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சித்ரா பவுர்ணமியை ஒட்டிய இரு நாட்களில் மட்டும், இரண்டு லட்சம் பக்தர்கள், கிரி மலை ஏறுவர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், இங்கு வரும் பக்தர்களை வைத்து, பல விதங்களிலும் பணம் பண்ணும் வியாபாரம் நடந்து வந்தது.

கிரி மலையில் உண்டியல் வைக்கும் உரிமத்தை எடுப்போர், திருநீர், கற்பூரம், பூ, கயிறு, எலுமிச்சம்பழம், தேங்காய் என சகலமும் அநியாய விலைக்கு விற்றனர். தனி வரிசைக்கு ஐநுாறு, ஆயிரம் என பக்தியை, பணம் பண்ணும் வித்தையாக மாற்றியிருந்தனர். வரும் வழியெங்கும் கடைகள் விரிக்கப்பட்டதால், பாலித்தீன் குப்பைகள் குவிந்து, இளங்காற்று வீசும் அந்த மலையை மூச்சுத் திணற வைத்தன.

இதற்கு முடிவு கட்டும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, சிவ பக்தர்கள் அமைப்பு, கிரி மலையில் உண்டியல் வைக்கும் உரிமையைப் பெற்று, அனைத்து வணிக நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்த ஆண்டிலும், அதே அமைப்பு, இந்த ஆன்மிகப் பணியை மேற்கொள்வதால், பக்தர்கள் மனமகிழ்வோடு மலையேறலாம். மறக்கக்கூடாத ஒரே விஷயம், இறைவனைத் தரிசிக்கும் இந்த இனிய ஆன்மிக அனுபவத்தில், இயற்கையையும் நேசித்து, அதைப்பாதுகாக்க வேண்டுமென்பது தான்.

-நமது நிருபர்-
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பதிவு செய்த நாள் 07 மே 2017 01:08

சென்னை, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, அதிவேக சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

புறப்படும் இடம் தேதி மற்றும் நேரம் சேரும் இடம்

திருச்சி ஜூன், 3, 10, 17, 24 பகல், 3:15 மணி சென்னை எழும்பூர்

எழும்பூர் ஜூன், 7, 14, 21, 28 காலை, 9:30 மணி திருச்சி

எழும்பூர் ஜூன், 3, 10, 17, 24 இரவு, 10:40 மணி எர்ணாகுளம், கேரளா

எர்ணாகுளம் ஜூன், 6, 13, 20, 27 இரவு, 7:00 மணி எழும்பூர்

எர்ணாகுளம் ஜூன், 4, 11, 18, 25 மாலை, 4:00 மணி ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ஜூன், 5, 12, 19, 26 இரவு, 10:00 மணி எர்ணாகுளம்

எழும்பூர் ஜூன், 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29

பகல், 1:00 மணி ஹூப்ளி, கர்நாடகா

எர்ணாகுளம் ஜூன், 7, 14 பகல், 2:45 மணி யஷ்வந்த்பூர்,கர்நாடகா

சென்னை சென்ட்ரல் ஜூன், 6 மாலை, 4:00 மணி மட்கான், கோவா

கொச்சுவேலி, கேரளா மே, 25, ஜூன், 1, 8, 15, 22, 29

காலை 5:10 மணி எழும்பூர்

எழும்பூர் மே, 25 ஜூன், 1, 8, 15, 22, 29

இரவு, 11:45 மணி கொச்சுவேலி
முதுகலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை: கவுன்சில் விதிமுறையை பின்பற்ற உத்தரவு

பதிவு செய்த நாள் 07 மே 2017  01:08

சென்னை, முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் படி, முதுகலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு டாக்டர்கள், தொலைதுார பகுதி மற்றும் கடினமான பகுதிகளில் பணியாற்றினால், 10 சதவீதம் முதல் அதிகபட்சம், 30 சதவீதம் வரை, ஊக்க மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். 'நீட்' மதிப்பெண்ணுடன், இந்த ஊக்க மதிப்பெண்ணும் சேர்த்து கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் சேர்க்கை நடக்கும்.

மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்ற கோரி, டாக்டர் ராஜேஷ் வில்சன் என்பவர், மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, 'முதுகலை மருத்துவப் படிப்பில், மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்றி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும்; மாநில அரசு சொந்தமாக மதிப்பெண் கணக்கிடும் முறையை, பின்பற்ற முடியாது' என, உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, மருத்துவ மாணவர்கள் சார்பில், தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இருவரும், மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர். 'மாநில அரசு வெளியிட்ட விளக்க குறிப்பின் அடிப்படையில், ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்' என, நீதிபதி சசிதரனும், 'மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படியே, ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்' என, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியனும் உத்தரவிட்டனர்.

மாறுபட்ட உத்தரவால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர்கள் ஆர்.என்.அமர்நாத், ஜி.சங்கரன் உள்ளிட்டோரும், மருத்துவ கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், வழக்கறிஞர் வி.பி.ராமன் ஆஜராகினர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி சத்தியநாராயணன், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டிபிறப்பித்த உத்தரவு:

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிமுறைகள், குறிப்பாக முதுகலை மருத்துவ கல்விக்கான விதிமுறைகள் முதன்மையானவை. எனவே, அந்த விதிமுறைகளை, மேல்முறையீட்டு மனுதாரர்கள் பின்பற்ற வேண்டும்.

மருத்துவ கல்வியைப் பொறுத்தவரை, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தான் அதிகாரம் உள்ளது என்பதை, உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெரிவித்துள்ளது. அதை புறக்கணித்து விட்டு, மாநில அரசுகள் சொந்தமாக வழிமுறைகளை வகுப்பதாக, மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் சரியாக சுட்டிக்காட்டினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு, மாநில அரசு கட்டுப்பட்டது. சட்ட விதிகளையும், விதிமுறைகளையும், அவர்கள் பின்பற்ற வேண்டும். ஆனால், உணர்வுபூர்வமாக, கருணை அடிப்படையில், தாங்கள் மேற்கொண்ட நிலையை நியாயப்படுத்துகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு, அவர்களை மட்டுமே குறை கூற வேண்டும். தொலைதுார மற்றும் கடினமான பகுதிகள் எவை என்பதை அடையாளம் காண, வரையறை செய்ய, மாநில அரசுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை கண்டிப்புடன், பின்பற்ற வேண்டும். மலை, தொலைதுார, கடினமான பகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவை தவிர, மற்றபடி, அவரது உத்தரவில் உடன்படுகிறேன். மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்ததை, நீதிபதி சத்தியநாராயணனும் உறுதி செய்துள்ளார். எனவே, மருத்துவ கவுன்சில்விதிமுறையை தான் பின்பற்ற வேண்டும்.

மருத்துவ கவுன்சில் விதி சொல்வது என்ன?

தமிழகத்தில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு, 1,225 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அதாவது சராசரியாக, 612 முதுநிலை மருத்துவ இடங்கள், தேசிய அளவிலான கவுன்சிலிங்கிற்கு செல்கின்றன. மீதமுள்ள, 613 இடங்கள், மாநில மருத்துவ கவுன்சிலிங்கில் இடம்பெறுகின்றன.
இந்த, 613ல், 306 இடங்கள், கிராம மற்றும் மலைப் பிரதேசங்களில், இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றும், அரசு டாக்டர்களுக்கு, 'சர்வீஸ்' கோட்டா அடிப்படையில் வழங்கப்பட்டன. 'எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ' போன்ற முதுநிலை மருத்துவம் படிக்க, ஒப்பந்த அடிப்படையில், இந்த இடங்களை தமிழக அரசு வழங்கி வந்தது.

இந்நிலையில், 'சர்வீஸ்' கோட்டா உட்பட அனைத்து விதமான இட ஒதுக்கீட்டையும், இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது. ஆனால், மலைப் பிரதேசங்கள், சிரமமான மற்றும் தொலைதுார பகுதியில் உள்ள, மருத்துவமனையில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, ஓராண்டு பணியில் இருப்பின், 10 சதவீதம்; இரண்டாண்டுக்கு, 20; மூன்றாண்டுக்கு, 30 சதவீதம் என, கூடுதல் மதிப்பெண் வழங்கலாம் என கூறியுள்ளது.

ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றமும், இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்ற உத்தரவிட்டது. அதையடுத்தே, சென்னை உயர் நீதிமன்றமும், இந்திய மருத்துவ கவுன்சிலிங் விதியை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இந்த விதியால், தமிழகத்தில், 100க்கும் குறைவான டாக்டர்கள் மட்டுமே பயன் பெறுவர் என, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
அதேபோல், இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பயன்படுத்தினால், தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில், நிபுணர்கள் இல்லாத சூழல் ஏற்படும் என அரசு கருதுகிறது.

மேல்முறையீடு குறித்து ஆலோசனை

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, சென்னை, தலைமை செயலகத்தில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில், தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வது அல்லதுஅவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப் பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு டாக்டர்கள் சங்கம், போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. ஆனால், இதர சங்கங்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும் என, அறிவித்து உள்ளனர்.- நமது நிருபர் -
ஜனாதிபதி ஒப்புதலுக்கே போகாத 'நீட்' மசோதா!

'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக, தமிழக அரசால் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு போகாமல், மத்திய உள்துறை அமைச்சகத்தில், கிடப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.



சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நாடு முழுவதும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, அகில இந்திய அளவிலான, 'நீட்' பொது நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

நிறைவேற்றம்

'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து, 'மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையிலும், முதுநிலை படிப்பு சேர்க்கையிலும், தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும்' என, தமிழக சட்டசபையில், ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஒப்புதல் பெற்றுத் தரும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல் வர் பழனிசாமி, இரண்டு முறை கடிதம் எழுதினார். ஆனால், இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

ஆனால், தமிழக அமைச்சர்கள், 'சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து விடும். இந்த ஆண்டு, தமிழ கத் தில், 'நீட்' தேர்வு நடைபெறாது' என கூறி

வந்தனர்.இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபை யில் நிறைவேற்றப்பட்ட, 'நீட்' மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன், ஏப்., 17ல், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து, ஏப்., 20ல், அவருக்கு பதில் கடிதம்அனுப்பப்பட்டது. அதில், 'அதுபோன்ற எந்த மசோ தாவோ, அவசர சட்டமோ, எங்களுக்கு வரவில்லை. உங்கள் கடிதம், உள்துறை அமைச்சகத்தின் கவனத் திற்கு அனுப்பப்பட்டுள் ளது' என தெரிவிக்கப் பட்டிருந்தது.

'தமிழக சட்டத்திற்கு, விரைவில் ஜனாதிபதி ஒப்பு தல் கிடைத்துவிடும்' என, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், சட்ட மசோதா இன்னமும், ஜனாதிபதி அலுவலகத்திற்கே செல்ல வில்லை என்ற தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூடுதல் விளக்கம்

இதுகுறித்து,தமிழக அரசு அதிகாரிகள் கூறிய தாவது: தமிழக சட்ட மசோதா, ஜனாதிபதி அலுவலகத்திற்கு, இன்னமும் செல்லவில்லை என்பது உண்மை தான். தமிழக சட்டசபையில், சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும், கவர்னரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்பின், தமிழக சட்டத்துறை மூலமாக, முறைப்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், இந்த சட்டம் குறித்து, மத்திய சுகாதா ரம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம், கருத்து கேட்டனர்.அதன்படி, இரு அமைச்சகங்களும் கருத்து தெரிவித்தன. அது தொடர்பாக, கூடுதல் விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட, கூடுதல்

விபரங்கள் அளிக்கப்பட்டன. அந்த விபரங்கள் மீது, மீண்டும் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் திடம், மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து கேட்டுஉள்ளது.

காலதாமதம்

அந்த அமைச்சகங்கள் கருத்து தெரிவிப்பதில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு துறைகள் தெரிவிக்கும் கருத்தை பரிசீலித்த பிறகே, மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட மசோ தாவை, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும். இதை விரைவுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இன்று தேர்வு!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, இன்று நடக்கிறது. நாடு முழுவதும், 11.35 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதுகின்றனர்.தமிழகத்தில், 88 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல் வேலி, வேலுார் ஆகிய இடங்களில் அமைத் துள்ள மையங்களில், தேர்வு எழுதுகின்றனர்.

- நமது நிருபர் -

விதிமீறும் டாக்டர்களுக்கு மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் 06 மே 2017

20:58 ''எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்த மருத்துவர்கள், நிபுணர் எனக்கூறி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர், செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.
மருத்துவ கவுன்சில் விதிப்படி, எம்.பி.பி.எஸ்., படித்த பின், எம்.டி., - எம்.எஸ்., போன்ற மேற்படிப்பு படித்த டாக்டர்கள் மட்டும் தான், துறை சார்ந்த நிபுணர்கள் எனக்கூறி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆனால், கிராமங்களில், எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்த டாக்டர்கள், தங்களை துறை சார்ந்த நிபுணர்கள் எனக்கூறி, இதய நோய் உள்ளிட்ட சிகிச்சை அளித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோன்று சிகிச்சை அளித்த டாக்டர்களால், உயிரிழப்புகள் ஏற்பட்டு, மருத்துவமனைகள் மீது, தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதுகுறித்து, மருத்துவ கவுன்சில் தலைவர், டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:

எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள், குழந்தைகளுக்கும், நீரிழிவு போன்ற நோய்களுக்கும், பொது சிகிச்சை அளிக்கலாம். ஆனால், பட்ட மேற்படிப்பு முடிக்காமல், நிபுணர் எனக்கூறி, ஆபத்தான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது.

அதுபோன்று, டாக்டர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால், ஆதாரங்களுடன், 'பதிவாளர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், சென்னை' என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம். முறைகேடு உறுதி செய்யப்பட்டால், அந்த டாக்டர் மீது, அபராதம் அல்லது பதிவு ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடையாளம் அறிவது எப்படி?

தமிழக மருத்துவ கவுன்சிலின், www.tnmedicalcouncil.org என்ற இணையதளத்தில், டாக்டர்கள் விபரங்கள் உள்ளன. அதில், சந்தேகப்படும் டாக்டரின் பதிவு எண் மற்றும் பெயரை, 'டைப்' செய்தால், அந்த டாக்டரின் கல்வித் தகுதியை தெரிந்து கொள்ளலாம். அவர் போலி டாக்டர் என்றால், அதில் எந்த விபரமும் இருக்காது.

- நமது நிருபர் -
ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., இடங்கள்1.90 லட்சம் பேர் விண்ணப்பம்

பதிவு செய்த நாள் 06 மே 2017  19:34

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி யில் உள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 1.90 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் உள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இந்தாண்டிற்கான ஜிப்மர் நுழைவுத் தேர்வு, ஜூன், 4ல், 75 நகரங்களில், காலை, 10:00 - 12:30 மணி வரையிலும், பிற்பகல், 3:00 - 5:30 மணி வரையும் இரு பிரிவாக நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம், மார்ச், 27ல் துவங்கி, 3ம் தேதியுடன் முடிந்தது.

மொத்தமுள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து, 1.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு எம்.பி.பி.எஸ்., சீட்டிற்கு, 948 மாணவர்கள் வீதம் விண்ணப்பித்து உள்ளனர்.
கடந்தாண்டை காட்டிலும், 52,262 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதால், நுழைவுத் தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

'ஹால் டிக்கெட்' ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தபாலில் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. www.jipmer.edu.in என்ற இணையதளத்தில், வரும், 22ம் தேதி காலை, 10:00 மணி முதல், டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஜூன், 4 வரை, ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Saturday, May 6, 2017

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள்! #GoodParenting

குழந்தை


குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண். 
1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும்.

2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும்.

3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள்.
குழந்தைகள்

4. 'நீயெல்லாம் இதைச் செய்யக் கூடாது? உன்னால இதைச் செய்ய முடியாது’ என்பது போன்ற தன்னம்பிக்கையைக் குறைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். தங்கள் சக்திக்கு மீறிய செயலை செய்ய முயலும்போது உடனிருந்து உதவுங்கள். கடினமானதைப் புரியவையுங்கள். முயற்சி மற்றும் தோல்விகளில் இருந்தே நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே தடுக்கும்போது, புதிதாக செய்வதையே நிறுத்திவிடுவார்கள்.

5. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள். அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

6. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள்.

7. 'என்னைத் தனியாக விடு, நிம்மதியாக விடு' என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. பெற்றோர்கள் மன அழுத்தத்திலோ, குழப்பமான சூழலிலோ இருக்க நேர்ந்தாலும், உங்கள் சூழலைப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த மாதிரியான எதிர்மறையான வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள், 'பெற்றோருக்கு நம் மீது அன்பு இல்லை' என்று நினைப்பார்கள். நீங்கள் பெரிய துயரத்தில் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல், பக்குவமாகப் பேசி திசை திருப்ப வேண்டும்.
குழந்தை

8. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள்.

9. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்

 10. 'இவ்வளவு பெரியவனா இருந்தும் இப்படி செய்யுறியே, ஆள்தான் பெருசா வளர்ந்திருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். குழந்தைகள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் மகிழ்ச்சி, துக்கத்தை அவர்கள் வழியில் வெளிப்படுத்த அனுமதியுங்கள். குழந்தை விரும்பும் கிரிக்கெட் வீரர் சதம் அடிக்கும்போது படுக்கையில் ஏறிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால், நீங்களும் கொண்டாடுங்கள். மாறாக, நீங்கள் கோபப்படுவதால், அவர்கள் மனதில் தாழ்வுமனப்பான்மை உண்டாகும். ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையைத் தன்னம்பிக்கையுடன், மகிழ்ச்சியாக உலகத்தை எதிர்கொள்ள உறுதுணையாக இருங்கள்.

"நிர்பயா வழக்கில் இது மட்டுமே முழுமையான தீர்வாகாது!" வழக்கறிஞர் பாலமுருகன்.

நிர்பயா


ப்போது நினைத்தாலும் உள்ளம் கொதிக்கிறது. 2012-ம் ஆண்டில் நடந்த கொடூரம் அது. ஐந்து ஆண்டுகள் கழித்தும் ஆராத ரணத்துக்கு மருந்திட்டது போல சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு அமைந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நிர்பயா கடைசி நேரத்தில் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாட்டையே உலுக்கிய அந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நான்கு பேருக்கு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அளித்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் வன்முறையில் 15 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பில்கிஸ்பானு என்ற முஸ்லிம் பெண்மணி நீதியின் கரம் பற்றி போராடி வென்றுள்ளார். குற்றவாளிகளுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. குற்றத்துக்கு துணையாக இருந்த போலீசாருக்கும் நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பின் பெண்ணின் போராட்டத்துக்கு நீதி கிடைத்துள்ளது.
நிர்பயாவுக்கு முன்னும் பின்னும் பெண் இனம் பாலியல் வன்கொடுமைகளை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஹாசினி, ரித்திகா என்று பிஞ்சுக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பல குற்றங்கள் காவல் நிலையத்தைக் கூட தொடாமல் மறைக்கப்பட்டு விடுகிறது. நாடே எதிர்பார்த்து காத்திருந்த நிர்பயா வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு... சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வழக்கறிஞர் மற்றும் மக்கள் கண்காணிப்புக் கழகத்தின் தேசிய குழு உறுப்பினர், எழுத்தாளர் ச.பாலமுருகனிடம் நிர்பயா பாலமுருகன்கேட்டோம்.

‘‘மக்கள் கண்காணிப்பகத்தில் மரண தண்டனை என்பது இந்தச் சமூகத்தில் குற்றங்களைக் குறைப்பதற்கான தீர்வாக இருக்காது என்கிற கொள்கை முடிவை எடுத்திருக்கிறோம். மரண தண்டனையை ஒரு காலத்திலும் ஆதரிக்க முடியாது. பாப்புலரான வழக்காக இருந்ததால் அரிதினும் அரிதான வழக்குகள் மற்றும் சென்சிட்டிவ் வழக்குகளில் மரண தண்டனை வழங்குவது தொடர்ந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் துயரத்தை வேதனையோடு அணுகுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு கொலை தண்டனை மட்டுமே தீர்வாகாது என்கிறோம்.

சமூகத்தில் தண்டனை பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தி விடும் என்று நினைப்பது எதார்த்தத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை கிடையாது. தண்டனை வழங்கப்படுவதால் குற்றங்கள் குறைவதில்லை. அடிப்படையில் பெண்களுக்கு எதிரான பார்வை என்பது எல்லா மனிதர்களிடமும் ஊறியுள்ளது. நம் சமூகத்தில், மதங்களில், கடவுள்களில் பெண்களுக்கு எதிரான பார்வை ஆண்டாண்டு காலமாக பதியவைக்கப்பட்டுள்ளது.
நம் சமூகத்தின் பெரும்பாண்மையோரின் பார்வையில், பெண்களின் உடல் சமூகத்தின் சொத்து என்ற எண்ணம் காலம் காலமாக விதைக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் வெளியில் வருகிற பெண்களை கையைப் பிடித்து இழுக்கலாம் என்ற எண்ணம் பொதுபுத்தியில் இங்கு பதிந்து போயுள்ளது. இவற்றில் மாற்றம் வராமல் நான்கு பேரைத் தூக்கில் போடுவதால் பிரச்னை தீராது.

சினிமாவில் பெண்ணை இழிவுபடுத்தும் விஷயங்கள் காட்டப்பட்டால் அதை எதிர்க்கிறோம். ஆனால் நம் வீட்டில், பள்ளியில், கல்லூரிகளில் பெண்ணை மதிக்க என்ன சொல்லித்தருகிறோம்? ஆண் மனதில் பெண் உடல் தொடர்பாக இருக்கிற பிம்பத்தை எப்படி உடைக்கப் போகிறோம்? குற்றங்கள் மரண தண்டனையோடு தொடர்புடையதல்ல. மரண தண்டனைக்கு அடுத்த நாளில் இருந்து பெண்களை சகோதரியாகவும், தோழியாகவும் பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது.

ஊடகங்களில் தொடர்ந்து பேசப்பட்ட எல்லா வழக்குகளிலும் இது போன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள. பில்லா ரங்கா வழக்கு, ஆட்டோ சங்கர் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பில்கிஸ்பானு பாதிக்கப்பட்ட சம்பவம் 2002-ல் நடந்தது. குடும்பத்தில் 8 பேரைக் கொன்று அந்தப் பெண்ணை 15 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். அது பாப்புலரான வழக்காக பார்க்கப்படவில்லை. அதில் மரண தண்டனை வழங்கப்படவில்லை. தண்டனை அளவு வரையறுக்கப்படவில்லை.
சென்சேசன் வழக்குகளில் துரதிஷ்டவசமாக நீதிபதிகளின் விருப்பு வெறுப்பு சார்ந்தே தீர்ப்பு வழங்கப்படுகிறது. 1989-ல் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனைகொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அரிதினும் அரிதான வழக்கு என்பதற்கு சட்ட வரையரை எதுவும் வழங்கப்படவில்லை.
நிர்பயா பாதிக்கப்பட்டதற்கு தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தண்டனை வழங்கப்பட்டிருக்கும் வடிவத்தில்தான் மாறுபடுகிறோம். நிர்பயா சம்பவம் நடந்த சமயத்தில் தூத்துக்குடியில் பள்ளி செல்லும் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது. அது இந்தளவுக்கு சென்சேஷன் ஆக்கப்படவில்லை. மிடில் கிளாஸ் மனநிலையில் அந்த வழக்கு அணுகப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு, மரியாதையை மேம்படுத்தும் போதுதான் பாலியல் வன்கொடுமைக்கான வேரை அறுக்க முடியும். மரண தண்டனையால் மட்டும் பெண்களுக்கான பாதுகாப்பும், பெண்களுக்கான நீதியும் சமூகத்தில் கிடைக்காது.

வறண்டு காட்சியளிக்கும் கும்பகோணம் மகாமக குளம்..!

kumbakonam

உலக பிரசித்தி பெற்றது கும்பகோணம் மகாமக திருவிழா. அத்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சி மகாமக குள புனித நீராடல். மகாமக குளத்தில் நீராடுவதை பக்தர்கள் பெரும் புண்ணியமாக கருதுவார்கள். ஆனால், அடிக்கும் வெயிலுக்கு இச்சிறப்பு வாய்ந்த குளமும் தப்பிக்கவில்லை. பல லட்சம் பக்தர்கள் புனித நீராடிய மகாமக குளம் தற்போது வறண்டுபோய் தண்ணீரின்றி காட்சி அளிக்கிறது. இதனால் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளத்தில் தண்ணீர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
 
இந்திய அளவில் மூன்று முக்கியமான தீர்த்தங்கள் என காசி, ராமேஸ்வரம், கும்பகோண மகாமக தீர்த்தங்களைத்தான் சொல்வார்கள். இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மகாமக ளம் வறண்டுள்ளது. குளத்தின் ஒட்டுமொத்த பரப்பளவு 4.96 ஏக்கர். ஆழம் 22 அடி. இந்தக் குளத்துக்கு அரசலாற்றில் இருந்துதான் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. இதன் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளால் தடைபட்டதும், நகராட்சியின் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து மகாமக குளத்துக்குத் தண்ணீர்விட்டனர். தற்போது, அதுவும் நிறுத்தப்பட்டு குளம் வறண்டு காட்சியளிக்கிறது.

Students worried over V-C-less AU convocation

By Ashmita Gupta  |  Express News Service  |   Published: 06th May 2017 02:16 AM  |  
Last Updated: 06th May 2017 07:42 AM  |
Anna University, Chennai.
Anna University, Chennai.
CHENNAI: Anna University’s decision to go ahead with the convocation even before choosing a Vice-Chancellor has left faculty members and students fuming. It is only an indication that these academic certificates will have little value in the institutions abroad if they do not carry the signature of the V-C, they point out.

University authorities seeking a date from the Chancellor, Governor Ch Vidyasagar Rao, to conduct the convocation ceremony has triggered furious opposition from within. In the absence of the Vice-Chancellor, the degree certificates would bear the signature of the higher education secretary, which, experts say, would spell trouble in future, especially in foreign countries.

“If they are not signed by the Vice-Chancellor, students might face problem. The universities in India might accept the certificates, but the foreign universities would refuse to do so,” said S Chandramohan, professor in the Electrical and Electronics Engineering department. As per the amendment in 2011, in the absence of a Vice Chancellor, a senior most professor can officiate in that capacity, including signing certificates, he said. For the record, it has been over 10 months since the prestigious institution is without a head.


Agreeing with him, another professor requesting anonymity added: “Even if they issue the certificates now with higher education secretary’s signature, they will have to reissue them later. The official should not sign especially the PhD certificates; otherwise students will be in big trouble when they head abroad for further studies,” he said.
 
The confusion that is persisting over this has already hit the students. A scholar who has finished his Ph.D pointed out that the convocation should have been conducted last November-December. “When we last enquired, officials from administration said the convocation dates will be known only after the new V-C was appointed. Without Vice-Chancellor’s signature, I do not know whether the certificate will be valid. I am not sure if higher education secretary’s signature will be accepted,” he said.

The reported move to proceed with the convocation has angered the faculty unions, who have warned of consequences. “There will be protests if there is a convocation. It has never happened in the history of the university where convocation is conducted without a Vice-Chancellor,” said I Arul Aram, president of the Anna University Teachers Association (AUTA).

ESMA threat divides Tamil Nadu doctors, section of them withdraw stir 

By Sinduja Jane  |  Express News Service  |   Published: 06th May 2017 05:18 AM  |  
Last Updated: 06th May 2017 05:18 AM  |
Members of the Federation for Protection of Educational Rights participating in a protest seeking NEET exemption for Tamil Nadu at Valluvar Kottam on Friday | d sampathkumar
CHENNAI: Prodded by the Madras High Court’s veiled warning of action under the Essential Services Maintenance Act (ESMA), a section of doctors announced withdrawal of protest after holding discussions with the Health Minister and senior officials.

However, there are several other associations part of the protest, of whom some said the protests would continue while others said a decision would be taken during a meeting on Saturday. “We hope to get justice and so have temporarily withdrawn our protest all over the State,” said Dr P Balakrishnan, State general secretary of the Tamil Nadu Government Doctors Association, after the meeting with State authorities, which went on for over two hours at the Secretariat on Friday evening.

Dr G R Ravindranath from the Doctors Association for Social Equality added that they had not staged any protest but only conducted rallies, human chain and seminars on reservation. “So we will continue to do it,” added Ravindranath, who is a part of the Joint Action Committee. However, the main players in the protest such as Tamil Nadu Medical Officers Association and Service Doctors and Post Graduates Association have not yet taken a call on withdrawing the protest. “If the court verdict does not come in our favour, the State government should promulgate a special ordinance to save 50 per cent reservation for government doctors. Till then, we will continue our protest,” said Dr A Ramalingam, State organising secretary, Service Doctors and Post Graduates Association.

According to the association, after the Medical Council of India has given the right to the State government to notify remote areas, the authorities here should declare all primary health centres, taluk, non-taluk, district headquarters hospitals and Medical College Hospitals in Sivaganga, Tiruvarur and Tiruvannamalai districts as remote areas. “With this, over 60 per cent doctors will benefit,” said Ramalingam.

“We have always made sure that treatment for patients is not denied or even delayed. We took part in the strike only after finishing our shifts. We will continue our protest, as we always did, by conducting dharna and human chain,” he added, refusing to back down despite the HC warning.
The influential Tamil Nadu Medical Officers Association, that has a member base of over 3,000, said a decision would be taken at the general body meeting on Saturday. The association has been protesting at the Directorate of Medical Services (DMS) campus for the past 18 days.
“Till now we have not withdrawn the protest. The decision on whether to continue or withdraw the protest will be taken during the general body meeting,” said Dr G Anusya, State Women’s Wing secretary.

Meanwhile, the Medical Students of Tamil Nadu Association (MESTA) has indicated they will continue the protest in a democratic way, in a manner which will not affect the welfare of patients or general public. An emergency general body meeting of MESTA resolved to draw public attention to their cause by doing ward sensitisation programme after signing the attendance on Saturday.

The agitating doctors have assured the authorities they would not stay away from work en masse on Saturday, said senior officials who held two-hour long discussion with them this evening. “We instructed them to ensure that the strike will not affect treatment of patients or cause any inconvenience to the public. We hope they will withdraw the strike. They have social responsibility, and they are aware of it,” said health minister C Vijaya Basker.

“The doctors have assured they will not take mass casual leave on Saturday. Elective surgeries will not affected,” added health secretary J Radhakrishnan. The Director of Medical Education, Director of Public Health were part of the team that held talks with docs’ associations.
 Trains cancelled

The Railways has announced the cancellation of a couple of summer special trains citing poor patronage.


The Railways has announced the cancellation of train No. 06059 Coimbatore-Krishnarajapuram express and No. 06060 Krishnarajapuram-Coimbatore express (from May 17 to June 28); No. 06062 Coimbatore-Rameswaram express (from May 15 to June 30) and No. 06060 Rameswaram-Coimbatore express ( May 16 - June 28).

Chief Minister comes and goes; speed breakers too

 Officials cite security and smooth ride as reasons for removal

When Chief Minister Edappadi Palaniswami visited the city last month, officials swung into action and spruced up the arterial roads on which his convoy passed through. The highways and corporation engineers joined hands and removed all the speed breakers on at least half-a-dozen busy roads.
When reporters asked about the removal of the speed breakers, the officials gave two versions: one, for “security” reasons; and second, to ensure a smooth ride for the Chief Minister. After a brief stopover, the CM left for Chennai.

However, the engineers took their own time to lay the speed breakers again, much to the confusion of road users who were used to the presence of the humps.

Only a week ago, the speed breakers were laid again - only to be removed on Thursday night and Friday morning in all the places.

Though the men and machines were busy knocking off the speed breaker in front of the Government Rajaji Hospital and near Old Ramanathapuram Collector’s office near Anna bus stand, the debris was not cleared.And road users are baffled over the sudden demolition and resurfacing of speed breakers.
 Senate members of BU seek explanations for alleged irregularities

Members of the 200-plus Senate of the Bharathiar University on Friday sought answers to alleged irregularities in various departments in the institutions.

Sources, who attended the meeting, said that they questioned the University management appointing 68 persons for various posts when the vacancy for sanctioned posts was only 28, the extension given to the director of management department to submit lien, the failure to follow roster system in appointing faculty in constituent colleges and sought explanations for objections raised in the audit report.

The Senate members also wanted to know why the University had not appointed persons full time to the posts of Registrar, Public Relations Officer, Director - School of Distance Education, Director - Centre for Participatory Programme, NSS Coordinator and Director-PG Centre. They also questioned the delay in tabling audit reports, the sources said and added that the University management denied any wrong doing in appointment of teaching and non-teaching staff. It also claimed that it had no information of the purported DVAC inquiry into alleged wrong doings in appointments.

The University management also tabled audit report for the 2014-15 financial year. Around 150 members participated in the meeting, the sources added.

 HC quashes FIR against students

Warns them that complaint will stand restored if they indulged in violence again

Even as it quashed a First Information Report (FIR) registered against four students of a private engineering college here, the Madras High Court has directed them to submit an affidavit to the police and college authorities that they would not indulge in any illegal activity till the time they complete college.

While hearing the criminal original petition filed by the students against whom an FIR was registered under Sections 341, 324 and 506 (ii) of the IPC on the basis of a complaint by another student, Justice R. Mahadevan said the violent acts of the petitioners on the college campus cannot be countenanced.
According to the police, Vijay Chowdhri alias Gullapallai Yugasai Vijay Kumar, Shiva Vardhan alias Naga Mega Shiva Vardhan Reddy, Kumaresh alias Kumara Venkatesh and Sirish alias Baratam Sirish Mohan — all second year students in Sathyabama University — were involved in violence and the FIR was based on a complaint by another student Akkash Reddy.


While Kumar was from Maharashtra, Vardhan Reddy and Kumara Venkatesh were from Andhra Pradesh and Sirish Mohan was a native of Odisha.

The judge quashed the FIR on the condition that each of the petitioners file individual affidavits countersigned by their parents that they would not indulge in any such illegal activity in the remaining period of their study in question.

“Failing compliance of the condition, the FIR shall stand restored against them. Such affidavits have to be submitted within two weeks from the date of receipt of a copy of this order,” Justice Mahadevan said.

 Court asks MCI to consider Plus Two marks

Grants three weeks time to pass orders on the petitioner’s representation

The Madras High Court has directed the Medical Council of India (MCI) to consider the representation of a litigant seeking modification to the regulation that bases admissions to undergraduate medical courses on only marks obtained in the National Eligibility-cum-Entrance Test (NEET).

The petitioner wanted the admission to be based on both Plus Two marks and NEET marks.
“The issue raised in this petition is a larger issue. Therefore, without expressing any opinion on merit, this court directs the MCI to consider and pass orders on petitioner’s representation within three weeks. However, the larger issue in the petition is kept pending,” said the Vacation Bench of Justices N. Kirubakaran and V. Parthiban.

The Bench posted the matter after the vacation for report of compliance.


Claiming that each State has its own system and pattern of education, including the medium of instruction, the petitioner said, “Students from metropolitan areas enjoy greater privileges than their counterparts from rural areas in terms of standard education. In a single window competition, the disparity in educational standards in different parts of the country cannot ensure a level playing field. Most of the candidates from Tamil Nadu are from the State Board syllabus and they would not be in a position to meet the NEET standards.”

Level playing field

To ensure a level playing field for students from different syllabi, the petitioner sought the modification of clause V of the MCI Regulations on Graduate Medical Education, 1997.
All 3 dying declarations were voluntary & consistent: Court


The Supreme Court upheld and relied heavily on three sets of Nirbhaya's dying declarations, including the one made mostly through gestures, nods and jottings as she was not in a position to speak or write properly , to confirm the death sentences of the four convicts.
A bench of Justices Dipak Misra, R Banumathi and Ashok Bhushan said a dying declaration should not necessarily be made by words or in writing and it could be through gestures. It refused to give credence to the submission made by the convicts that the dying declarations not be relied on.
Three dying declarations were recorded. The first by a doctor when she was admitted to hospital on December 16, 2012 and the second on December 21 by the SDM in which she gave exact details. The third was recorded by a metropolitan magistrate on December 25 mostly through gestures. Challenging the validity of her dying declarations, the convicts contended there were discrepancies in her statements and the third account through gestures was not videographed. The court rejected the plea.

“The contention that the third dying declaration made through gestures lacks credibility and that the same ought to have been videographed, in our view, is totally sans substance.The dying declaration recorded on the basis of nods and gestures is not only admissible but also possesses evidentiary value, the extent of which shall depend upon who recorded the statement,“ the bench said.

“In the present case, this caution was aptly taken, as the person who recorded her dying declaration was the metropoli tan magistrate and he was satisfied himself as regards the mental alertness and fitness of the prosecutrix, and recorded her dying declaration by noticing her gestures and her own writings,“ the bench said.

The court held that all three dying declarations were voluntary, consistent and trustworthy, satisfying the test of reliability. It said the dying declarations are well corroborated by medical and scientific evidence and supported by the testimony of her male friend who was with her on that night.

“In the case of rape and sexual assault, the evidence of prosecutrix is very crucial and if it inspires confidence of the court, there is no requirement of law to insist upon corroboration of the same for convicting the accused. Courts are expected to act with sensitivity and appreciate the evidence of the prosecutrix in the background of the entire facts of the case and not in isolation,“ the court said.

“In our view, all the three dying declarations are consistent with each other and well corroborated with other evidence and the trial court as well as the high court correctly placed reliance upon the dying declarations of the prosecutrix to record the conviction,“ it said.
A cry for death penalty for juvenile
Bareilly:


As the Supreme Court on Friday upheld the death sentence for four men convicted of raping and killing a 23-year-old paramedic student in Delhi in 2012, there was a palpable sense of gloom in Bhavanipur Nagla village of Bareilly , where the fifth convict, a juvenile during the crime, grew up. People wanted a similar punishment for him too.
 
People of the village, mostly women, said that they were not happy that the boy got away with “far too little“ while other accused will now have to face the death sentence.
The juvenile walked free in December 2015 after serving a three-year term at a reform home. He never returned home or contacted his family and five younger siblings since, they said.
Former village pradhan Laltesh Yadav told TOI, “The four other convicts paid the price for committing the crime, but the boy got away with very little punishment.He too deserved the death penalty like the others.“

However, the juvenile's family still awaits his return.“My son was punished for whatever wrong he did. However, I want him to come back home and take care of his poor family .,“ said his mother.

BHOPAL NEWS