Friday, March 27, 2015

ஓய்வூதியர்கள் ஜூனுக்குள் சான்றுகள் அளிக்க வேண்டும்

ஓய்வூதியர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆஜராகி சான்றுகளை சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சான்றுகளை வழங்க ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நேரில் ஆஜராக இயலாதவர்கள் வாழ்வுச் சான்றுடன் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

நேரில் வருபவர்கள்: ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு எண்,வங்கி வரவு புத்தகம்,வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் மறுமணம் புரியா சான்றுடனும் வர வேண்டும்.

நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்: வாழ்வு சான்று உரிய படிவத்தில் மேற்கூறிய 5 ஆவணங்களின் நகல்களுடன், சான்றொப்பம், மறுமணம் புரியா சான்று உள்ளிட்டவைகளை அனுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்: வெளிநாட்டிலுள்ள மாஜிஸ்திரேட்,நோட்டரி, வங்கி மேலாளர், இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச்சான்று பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இதர விவரங்கள்: ஓய்வூதியர்கள் இருப்பிட முகவரி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் ஜூன் மாதத்துக்குள் வர தவறிய ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் மாதிரிப் படிவத்தை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பொதுத் துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழக மின்வாரியம், ரயில்வே துறை,அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...