Friday, April 14, 2017

இணையதளத்தில் அரசு ஊழியர் சொத்து விபரம் : உயர்நீதிமன்றம் தள்ளுபடி

பதிவு செய்த நாள் 13 ஏப்  2017  23:16

மதுரை: அரசு ஊழியர் சொத்து விபரத்தை இணையதளத்தில் வெளியிட கோரிய மனுவை, மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை பெறும் சான்றிதழ்கள் அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. வருவாய்த்துறை, கனிமவளத்துறை போன்ற துறைகளிலும், முட்டை கொள்முதல், மின் உபகரணங்கள் வாங்குவது போன்றவற்றிலும் ஊழல் மலிந்துள்ளது. அதன் மூலம் அரசு ஊழியர்கள் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். மத்திய அரசு ஊழியர்களை போல், மாநில அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விபரத்தை, துறை தலைவர்களிடம் ஆண்டுதோறும் தெரிவிக்கவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் உத்தரவு: அரசு ஊழியர்களின் நடவடிக்கையை கண்காணிக்க சட்டம், விதிகள் ஏற்கனவே உள்ளன. குறிப்பிட்ட துறை மற்றும் முறைகேடு புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடலாம். இம்மனு மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது.இவ்வாறு உத்தரவிட்டனர்.இதனால் மனு வாபஸ் பெறப்பட்டது. மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...