Saturday, April 15, 2017

தமிழக அரசு காலண்டரில்பன்னீர்செல்வம் 'மிஸ்சிங்'

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017   22:32

சிவகங்கை, : தமிழக அரசு வெளியிட்டுள்ள 2017 மாத காலண்டரில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் படம் இடம் பெறவில்லை.தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் மாத காலண்டர், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் வர வேண்டிய காலண்டர் தற்போது தான் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மறைந்த ஜெயலலிதா படம் இடம் பெற்றுள்ளது. கீழ்ப்பகுதியில், நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும், முதல்வராகவும் பழனிசாமி பதவி ஏற்ற காட்சிகள் உள்ளன.

ஆனால், ஜெயலலிதா மறைந்த பின் அப்பதவியை ஏற்ற பன்னீர்செல்வம் படம் இடம்பெறவில்லை.பன்னீர் ஆதரவாளர்கள் கூறுகையில், 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால், ஓ.பி.எஸ்.,

படம் வெளியாகவில்லை. ஜனவரியில் அவர்தான் முதல்வராக இருந்தார். அதன் பிறகே பழனிசாமி பொறுப்பேற்றார்' என்றனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...