Tuesday, April 11, 2017

கொளுத்தும் வெயிலால் கருகும் மக்கள்... சதம் அடித்து வதம்! வரும் நாளில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கோடை மழை ஏமாற்றி வரும் நிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று, இதுவரை இல்லாத அளவாக, 105 டிகிரி பாரன்ஹீட் அளவை எட்டியது.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.நடப்பு ஆண்டும், போதிய மழை பெய்யவில்லை. குளிர் காலமான, ஜன., மாதத்தில், திருப்பூரில், 21 மி.மீ.,; காங்கயத்தில், 14.4 மி.மீ.,; அவிநாசி,6 மி.மீ.,; உடுமலை, 4.1 மி.மீ.,; பல்லடம், ஒரு மி.மீ., என, 6.64 மி.மீ.,மழை மட்டுமே பெய்தது. பிப்., மாதம் மழை பெய்யவில்லை. குளிர் கால மழை ஆண்டு சராசரி, 9.02 மி.மீ., ஆக உள்ள நிலையில், இந்தாண்டு குறைந்தது.வறட்சிக்கு கோடை மழை கைகொடுக்கும் என்ற நிலையில், கடந்த மாதம் ஓரளவு மழை பெய்தது. தாராபுரத்தில், 74.5 மி.மீ.,; காங்கயம், 47.6 மி.மீ.,; பல்லடம், 14 மி.மீ.,; மூலனூர், 14 மி.மீ.,; அவிநாசி, 6.7 மி.மீ.,; திருப்பூர், 4 மி.மீ.,; உடுமலை, 3.6 மி.மீ., என, மாவட்டத்தில் சராசரியாக, 23.49 மி.மீ.,மழை பெய்தது.

மார்ச் மாத, சராசரி மழை பொழிவு, 21.32 ஆக உள்ள நிலையில், இரண்டு மி.மீ., கூடுதலாக பெய்தது. ஆனாலும், கடும் வறட்சி மற்றும் பாசனம், குடிநீர், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், போதிய மழை பெய்யவில்லை. நடப்பு ஏப்.,மாதத்திலும் போதிய மழை பெய்யவில்லை. 6ம் தேதி இரவு, அவிநாசியில் மட்டும், 18 மி.மீ.,மழை பெய்தது.மழை பெய்யாததால், கடுமையான வறட்சி நிலவி வருவதோடு, வெயிலின் தாக்கமும் முன்னதாவே துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக வெயிலின் கடுமை அதிகரித்த நிலையில், நேற்று, வெப்ப நிலை உச்சத்தை தொட்டுள்ளது.நேற்று <<<உச்ச அளவாக 105 டிகிரி பாரன்ஹீட் ( 41 டிகிரி செல்சியஸ்) வெயில் அடித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அக்னி நட்சத்திர வெயில் போல், வெப்பத்தின் தாக்கம் அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு சூழல் நிலவுகிறது.

 திருப்பூரிலுள்ள பெரும்பாலான ரோடுகளில், நேற்று "கானல்நீர்' தென்பட்டது.ஏற்கனவே, வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு என பாதிப்பை சந்தித்து வரும் திருப்பூரை, வெயிலும் சேர்ந்து கொண்டதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்., மாதத்திலேயே "சதம்' தாண்டி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தாண்டு கோடை காலத்தை சமாளிப்பது என்பது மிகப்பெரிய சவாலே

.இது குறித்து கோவை வேளாண் பல்கலை கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், ""திருப்பூரில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, 41 டிகிரி செல்சியல் (105 பாரன்ஹீட்) என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில், வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். அடுத்த ஒரு வாரத்துக்கு கோடை மழைக்கு வாய்ப்பில்லை. 14ம் தேதி பொங்கலூர் பகுதியில், வானம் மேக மூட்டத்துடனும், சிறிய அளவில் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

Air India cancels flights to New York and Newark

Air India cancels flights to New York and Newark Press Trust of India New Delhi  25.01.2026 Air India has cancelled its flights to New York ...