Sunday, April 2, 2017

அப்பாவுக்கு விசுவாசமற்றவர் எப்படி மக்களுக்கு விசுவாசமுடன் இருப்பார்?'- கொதிக்கும் முலாயம்

சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க மொத்தம் இருக்கும் 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

அங்கு ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. அப்படி இருந்தும், வெறும் 47 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றது.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங்குக்கும், அகிலேஷுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த உட்கட்சி பிரச்னையால் கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஆட்சி மற்றும் கட்சியின் தலைவராக அகிலேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், அகிலேஷ் தலைமையில்தான், சமாஜ்வாதி தேர்தலை சந்தித்தது. முலாயம் சிங் இந்த தேர்தலில் இருந்து விலகியே நின்றார். கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு, முலாயம் சிங்கின் விலகல் போன்ற பல்வேறு காரணங்களால் ஆளும் கட்சி அந்தஸ்த்தில் இருந்தபோதும் தேர்தலில் படுதோல்வியை அடைந்தது சமாஜ்வாதி.

இதையடுத்து தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள முலாயம் சிங், 'என் வாழ்க்கையில் இதுவரையில் நான் சந்தித்திராத அவமானத்தைச் சந்தித்தேன். இருந்தும் நான் அதை சகித்துக் கொண்டேன். அப்பாவுக்கு விசுவாசமற்ற ஒருவர் எப்படி மக்களுக்கு விசுவாசமுடன் இருப்பார்? தனியாக ஒரு கட்சி ஆரம்பிப்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை கேட்ட பின்னர் தான் புதுக் கட்சி தொடங்குவது பற்றி ஒரு முடிவு எடுக்கப்படும்' என்று பேசியுள்ளார்.
Dailyhunt

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...