ராமமோகன ராவ் வழக்கு விசாரித்த அதிகாரி மாற்றம்
பதிவு செய்த நாள் 05 மே 2017 23:42
முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவின் வழக்கை விசாரித்த, வருமான வரித்துறை அதிகாரி, ராய் ஜோஸ்திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், வருமான வரித்துறையினர், 2016 டிசம்பர், 21ல், திடீர் சோதனை நடத்தினர்.
அது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த, கூடுதல் ஆணையர், ராய் ஜோஸ், புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், முன்னாள் அமைச்சர், விஸ்வநாதன், மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த சோதனைகளிலும் முக்கிய பங்கு வகித்தவர்.
இது குறித்து, வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: புலனாய்வுப் பிரிவு கூடுதல் ஆணையர், ராய் ஜோஸ் இடமாற்றம், வழக்கமானது தான். அவர் கவனித்து வந்த, ராமமோகன ராவ் தொடர்பான விசாரணை பொறுப்பை, மற்றொரு கூடுதல் ஆணையரான ஜெயராகவன் ஏற்பார். அவர் தான், அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கின் முக்கிய அதிகாரி. இந்த இரண்டு வழக்குகளும், சேகர் ரெட்டியுடன் தொடர்புடையவை என்பதால், அதை கையாளுவதில் சிரமம் இருக்காது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
-- நமது சிறப்பு நிருபர் -

No comments:
Post a Comment