நிர்பயா வழக்கு தீர்ப்பு: 10 அம்சங்கள்
புதுடில்லி: டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டில்லியில் நண்பருடன் பஸ்சில் வந்த மருத்துவ மாணவியை 6 பேர் கும்பல் கொடூரமாக கற்பழித்து தாக்கினர். படுகாயமடைந்த அந்த மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார். சம்பவத்தை கண்டித்து லட்சக்கணக்கான மாணவர்கள் டில்லியில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் மைனர் என்பதால், குறைந்தளவு தண்டனை கிடைத்தது. மற்ற 4 பேருக்கும் கோர்ட் தூக்கு தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தும் பயனில்லை. இன்று அவர்களுக்கு தூக்கு தண்டனையை கோர்ட் உறுதி செய்துள்ளது.

இவ்வழக்கின் தீர்ப்பின் 10 முக்கிய அம்சங்கள்:
01. தூக்கு தண்டனைக்கான வழக்கு என்றால், அது இதுதான். இந்த குற்றம் நடந்த விதம், சமூக நம்பிக்கையையே அழித்துவிட்டது. இது
அரிதிலும் அரிதான வழக்கு என்ற அடிப்படையில் தூக்கு தண்டனை வழங்கலாம்.
02. பாதிக்கப்பட்ட பெண்ணின் மரண வாக்குமூலம் தெளிவாக உள்ளது. இதனால், குற்றச்சாட்டு சந்தேகமில்லாமல் நிருபிக்கப்பட்டுள்ளது.
03.மருத்துவ மாணவியின் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என அவர்கள் எண்ணியுள்ளனர். குற்றவாளிகளின் செயலானது சுனாமியை போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
04. ஆறு பேரின் சதிச்செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்டது, அவர் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டு ஆதாரங்களை அழிக்க முயன்றதை ஏற்க முடியாது. பொறுத்து கொள்ள முடியாது. இது சமூகத்திற்கு எதிரான பெருங்குற்றம் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
05. என்.டி.ஏ., மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தும் குற்றவாளிகள் சம்பவ இடத்தில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. டில்லி போலீசார் அளித்த ஆதாரங்கள் அனைத்தும் குறை சொல்ல முடியாத வகையில் உள்ளன.
06. இந்த தீர்ப்பை கேட்ட மருத்துவ மாணவியில் தாய் ஆஷா தேவி,கண்ணீர் விட்டு அழுதார். கோர்ட் வளாகத்தில் கூடியிருந்தவர்கள் அனைவரும் தீர்ப்பை கைதட்டி வரவேற்றனர்.
07. இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை. யாரையும் தூக்கலிடக்கூடாது. அனைவரும் வாழ்வதற்கு உரிமை உள்ளது என்ற காந்திய கொள்கை அழிக்கப்பட்டுள்ளது. கோர்ட் தீர்ப்பை ஆய்வு செய்த பின்னர் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என குற்றவாளிகள் சார்பில் ஆஜரான
வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறினார்
08. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானது, சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். தூக்கு தண்டனை வழங்கியதை வரவேற்பதாகவும், இந்திய சட்ட நடவடிக்கைகளில் 5 ஆண்டு என்பது தாமதமில்லை என மத்தியஅமைச்சர் மேனகா கூறியுள்ளார்.
09. தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், வலிமையான செய்தியை அனுப்பியுள்ளதாக ஆஷா தேவியும், இந்த தீர்ப்பினால் மகிழ்வதாக மருத்துவ மாணவியின் தந்தை பத்ரி சிங்கும் கூறினார்.
10. தூக்குதண்டனையை எதிர்த்து அவர்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். இது நிராகரிக்கப்படும் போது, அவர்கள் ஜனாதிபதியிடம் தான் மேல்முறையீடு செய்ய முடியும்.

No comments:
Post a Comment