பிளஸ் 2 ரிசல்ட்: கோவை, தஞ்சையில் அலட்சியம்
கோவை, தஞ்சை மாவட்டங்களில், அதிகாரிகளின் அலட்சியத்தால், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், காலதாமதமாக வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுவதாக, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 'அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில், கலெக்டர்கள் முடிவுகளை வெளியிடுவர்' எனவும் அறிவித்திருந்தார்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, மூன்று நாட்களுக்கு முன், கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டார். நேற்று பிளஸ் 2 முடிவுகளை அறிவிக்க, கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு ஆசிரியர்களோடு அவர் வந்தார். கலெக்டர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றதால், அவர் வருகைக்காக காத்திருந்தார். காலதாமதத்தை உணர்ந்த செய்தியாளர்கள், கலெக்டரை தொடர்பு கொண்டு பேசினர். உடனே கலெக்டர், முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு, உடனடியாக தேர்வு முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர், தேர்வு முடிவுகளை, காலை, 10:50 மணிக்கு
வெளியிட்டார்.
கணேசமூர்த்தி கூறுகையில், ''சென்னையில் இருந்து பட்டியல் வருவதற்கு தாமதமாகி விட்டது. அதனால் தான், தாமதமாக வெளியிட்டோம்,'' என்றார்.ஆனால், சென்னையில் இருந்து, முதல் நாளே அனைத்து பள்ளிகளுக்கும் மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைத்து விட்டனர். மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், 'சிடி' வடிவில் முடிவுகளை அனுப்பி வைத்து விட்டனர். அப்படியிருந்தும், அதிகாரி ஏதேதோ காரணம் கூறி, நிருபர்களை சமாளித்து அனுப்பினார்.
தஞ்சை : தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை, 9:30 மணிக்கு, சி.இ.ஓ., அலுவலக ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என, அனைவரும் வந்து விட்டனர். 10:00 மணியாகியும், சி.இ.ஓ., சுபாஷிணி வரவில்லை. செய்தியாளர்கள், பி.ஆர்.ஓ., கல்வி துறை ஊழியர்கள் என, பலரும் தொடர்ந்து போன் செய்த நிலையில், சி.இ.ஓ., எடுக்கவில்லை. பத்திரிகையாளர்கள், பி.ஆர்.ஓ.,விடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை, கலெக்டர் அண்ணாதுரை சமாதானம் செய்தார்.பின், சி.இ.ஓ.,வுக்கு கலெக்டர் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், 11:30 மணிக்கு அவசர அவசரமாக வந்து, தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

No comments:
Post a Comment