Saturday, May 13, 2017

கான்ட்ராக்டர் தற்கொலை : வருமான வரித்துறை விளக்கம்

நாமக்கல் கான்ட்ராக்டர் தற்கொலைக்கு, நாங்கள் பொறுப்பாக முடியாது' என, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் கான்ட்ராக்டர், சுப்ரமணியம் எழுதி வைத்த கடிதத்தில், வருமான வரித்துறை அதிகாரியின் பெயர் இருப்பதாக, போலீஸ் தரப்பில் இருந்து, எங்களுக்கு தகவல் வரவில்லை. வருமான வரி சோதனை நடந்த போது, சுப்ரமணியம், வெளிநாட்டில் இருந்தார். அவர் நாடு திரும்பியதும், அவர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், விசாரணைக்கு அழைத்தோம். சென்னை அலுவலகத்திற்கு, ஒரு நாள் மட்டுமே வந்தார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, அவரிடம் விசாரணை அதிகாரி கேள்விகள் கேட்டுள்ளார். சில மணி நேர விசாரணையில், என்ன துன்புறுத்தல் இருக்க போகிறது? நாங்கள், எங்கள் கடமையைத் தான் செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

--- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025