மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய செயலி அறிமுகம்
பதிவு செய்த நாள்23மே2017 00:16
சென்னை;மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பயணிகளுக்கு உதவ, நிர்வாகம் மூலம் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் விமான நிலையம், பரங்கிமலை, சின்னமலையில் இருந்து கோயம்பேடு வழியாக நேரு பூங்கா வரை, மெட்ரோ ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த ரயில்களில் தினமும், 20 - 25 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.மெட்ரோ ரயில்களில் பயணிகள் போக்குவரத்தை அதிகரிக்க, நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி, மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பயன்படும் வகையில், 'cmrl app' என்ற புதிய செயலி, நேற்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த செயலியில் உள்ள தகவல்களை, கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.மெட்ரோ ரயில் வழித்தடங்கள், ரயில் புறப்படும் நேரம், சென்றடையும் நேரம், பயண துாரம், டிக்கெட் ரீசார்ஜ், வழியில் உள்ள நிலையங்கள், வாகன நிறுத்த வசதிகள், பாதுகாப்பு உதவி போன் எண்கள், அருகில் உள்ள பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான வசதிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.இந்த புதிய செயலியில், தகவல்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. வாகன நிறுத்தங்கள் குறித்த தகவல்கள் குழப்பமாக உள்ளன. மெட்ரோ ரயில் நிர்வாகம், இவற்றை சரி செய்ய வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment