Tuesday, May 23, 2017

50 சதவீத ஓய்வூதியர்களுக்கு மதுரை மண்டலத்தில் நேர்காணல்


பதிவு செய்த நாள்23மே2017 00:14

மதுரை: மதுரை மண்டலத்தில், ஏப்., முதல் தேதி முதல் இதுவரை, 50 சதவீத ஓய்வூதியர்கள் நேர்காணலில் பங்கேற்று, வாழ்நாள் சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர்.

இம்மண்டலத்திற்குட்பட்ட மதுரை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 248, திண்டுக்கல்லில் 18 ஆயிரத்து 392, தேனியில் 12 ஆயிரத்து 26, சிவகங்கையில் 13 ஆயிரத்து 675, புதுக்கோட்டையில் 12 ஆயிரத்து 787 ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க, ஏப்., முதல் தேதியிலிருந்து சம்பந்தப்பட்ட கருவூலங்கள், சார் நிலை கருவூலங்களில் நேர்காணல் நடக்கிறது. 

இந்த நேர்காணலில் மதுரை மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 451, திண்டுக்கல்லில் 13 ஆயிரத்து 107, தேனியில் 8 ஆயிரத்து 268, சிவகங்கையில் 5 ஆயிரத்து 575, புதுக்கோட்டையில் 8 ஆயிரத்து 277 உறுப்பினர்களும் தங்கள் வாழ்நாளை சமர்ப்பித்துள்ளனர்.

மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலத்தில், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள், வாழ்நாள் சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட கருவூல அலுவலகங்களுக்கு செல்ல முடியாத ஓய்வூதியர்கள், ஆன்லைனில் வாழ்நாள் சான்றுகளை சமர்ப்பிக்கலாம். வாழ்நாள் சான்று சமர்ப்பிக்காதவர்களுக்கு, ஜூலை முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025