Sunday, May 21, 2017

தண்ணீர் பஞ்சம்

தலைநகர் டில்லியிலும் கடும் தண்ணீர் பஞ்சம்

பதிவு செய்த நாள்: மே 20,2017 19:12

புதுடில்லி, தலைநகர் டில்லியிலும், கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ''தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, மத்திய அரசு உதவ வேண்டும்,'' என, டில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவருமான, மனீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார். 
டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். ஹரியானாவில் இருந்து, டில்லிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சமீபத்தில், டில்லிக்கு வழங்கும் தண்ணீரின் அளவை, ஹரியானா அரசு குறைத்துவிட்டது. இதனால், டில்லியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து, டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறியதாவது:ஹரியானா - டில்லி அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டில்லிக்கு அதிக தண்ணீர் வழங்க, ஹரியானா அரசுக்கு, கோர்ட் உத்தரவிட்டு
உள்ளது. எனினும், டில்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை, ஹரியானா அரசு வழங்கவில்லை.தற்போது, முக்கிய பிரமுகர்கள் வசிக்கும்பகுதிகளுக்கு, இடைவிடாது தண்ணீர் வழங்கப்படும் போது, சாமானியர்கள் வசிக்கும் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பிரச்னையில், மத்திய அரசு தலையிட்டு, ஹரியானாவில் இருந்து வர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்.இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...