கடலூர் அருகே 'டாஸ்மாக்' கடை சூறை
பதிவு செய்த நாள்: மே 21,2017 01:05
புவனகிரி, கடலுார் அருகே, புதிதாக திறக்கப்பட இருந்த 'டாஸ்மாக்' கடையை, கிராம மக்கள் அடித்து நொறுக்கினர். கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே, புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்காக, கொட்டகை அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நான்கு கிராமங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திரண்டனர்.டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி, புவனகிரி - குறிஞ்சிப்பாடி சாலையில், காலை, 11:30 மணிக்கு, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். 'திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு பக்கத்திலேயே அரசு உயர்நிலைப் பள்ளி, கோவில், பஸ் நிறுத்தம் உள்ளது; இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது' என, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களும், இளைஞர்களும், புதியதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடையை அடித்து சேதப்படுத்திவிட்டு, கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால், புவனகிரி - குறிஞ்சிப்பாடி சாலையில்,
இரண்டு மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment