Friday, May 5, 2017

இனி ரகளை செய்தால் தடை: புதிய விதிகளை அறிவிக்கிறது விமான போக்குவரத்து துறை

புதுடில்லி: விமானத்தில் பறக்க தகுதியற்றவர்கள் பட்டியலை வெளியிட்டு புதிய விதிமுறைகளை விமான போக்குவரத்து துறை வகுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் விமானத்தில் இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில், வாக்குவாதம் முற்றியதால், 'ஏர் - இந்தியா விமான நிறுவன ஊழியரை, சிவ சேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் செருப்பால் அடித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியதால் அவர் விமானத்தில் பறக்க பல்வேறு விமான நிறுவனங்களும் தடைவிதித்தன. பிரச்னை பூதாகரமாக வெடித்ததால் வேறு வழியின்றி மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பி மன்னிப்பு கேட்டார் ரவீந்திரா கெய்க்வாட் . பிரச்னை சுமூகமாக முடிந்தது
இந்நிலையில் விமான போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதமுறைகள் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை நடத்தியது. அதில் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர்கள் என பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி விமானத்திற்குள்ளும், விமான நிலையத்திலும், ரகளையில் ஈடுபடுபவர்கள், சக பயணிகளிடம் தகராறு செய்பவர்கள், விமான நிலைய ஊழியர்களை மிரட்டுவது, தாக்குவது , உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர்கள் என பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்கள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும். இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ நாளை (மே. 5-ம் தேதி) அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025