Sunday, June 11, 2017

கூட்டம் இல்லாததால் தம்பிதுரை காட்டம்
பதிவு செய்த நாள்10ஜூன்2017 22:43




கரூர், கரூர் அருகே நடந்த, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வராததால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கோபம் அடைந்தார்.
கரூர் அடுத்த, புலியூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில், நேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சிநடந்தது. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். 

சென்னையில் போக்குவரத்து துறை சம்பந்தமான ஆய்வுக்கூட்டம் இருந்ததால், மாவட்ட செயலரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் பங்கேற்கவில்லை.

நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இருந்தும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இல்லாததால், ஆவேசமடைந்த தம்பிதுரை, புலியூர் பேரூர் கழக செயலரை அழைத்து, ''கட்சி நிர்வாகிகள்,
தொண்டர்களை காணவில்லை; தகவல் சொல்லவில்லையா,'' என, கேட்டார். அதிர்ச்சியடைந்த அவர், அருகில் இருந்த மாவட்ட அவைத் தலைவரை பார்த்தார்.

நிலைமையை புரிந்து கொண்ட தம்பிதுரை, ''இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்து, தொண்டர்களை அழைத்து வரவேண்டும்.
அவர்கள் இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் எப்படி நடத்துவது. உங்களால் முடியவில்லை என்றால் சொல்லி விடுங்கள்; நானே வீடு தேடி போய் அழைத்து வருகிறேன்,'' என்றார்.

இதையடுத்து, மாவட்ட அவைத் தலைவரும், பேரூர் செயலரும், துண்டு சீட்டில் பெயர்களை எழுதி, அலைபேசி மூலம், நிர்வாகிகளை நிகழ்ச்சிக்கு அழைத்தபடி இருந்தனர். அதற்குள் தம்பிதுரை பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அங்கிருந்து சென்றார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...