Monday, June 12, 2017

தாம்பரம் ரயில் நிலையத்தில் பசியால் வாடும் பயணிகள்

பதிவு செய்த நாள்12ஜூன்2017 01:16


தாம்பரம்;தாம்பரம் ரயில் நிலைய நடைமேடைகளில் உண வகம் இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உரிமம்
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் என, எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த ரயில் நிலையம் வழியாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள், தினசரி சென்று வருகின்றன.அதே போல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் செல்லும் மின்சார ரயில்களின் சேவையும் தொடர்ந்து இருந்து வருகிறது.
சென்னை வரும் வெளியூர் பயணிகள், ஏழு மற்றும் எட்டாம் எண் நடைமேடை வந்து இறங்கி, வேறு ரயில் பிடித்தும், மற்ற வழிகளிலும் தங்கள் பணிகளுக்கு செல்கின்றனர்.இந்நிலையில், ஏராள மான ரயில்கள் வந்து செல்லும் அனைத்து நடைமேடைகளிலும், பயணி களுக்கு, நான்கு மாதங்களுக்கு மேலாக உணவகம் இல்லாமல் உள்ளது. இதற்கு முன் இயங்கி வந்த, 'கேன்டீன்' மூலம், பயணிகள் உணவு பெற்று, பசியாறி வந்தனர்.
தற்ேபாது கேன்டீனை நடத்துவதற்கு உரிமம் காலாவதியாகி, மீண்டும் புதிய ஆட்களை கொண்டு, உணவகம் நடத்தப் படாமல் இருந்து வருகிறது.
இதனால், முதியோர், குழந்தைகளுடன் வெளியூர் செல்லும் பயணிகள், காலை, மதியம், இரவு நேரங்களில், உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.கோரிக்கைரயில்வே நிர்வாகம், உணவகத்தின் உரிமம் வழங்கும் நடைமுறைகளை முடித்து கொடுத்தால், உணவகம் துவங்கப் படும் என்ற நிலைஉள்ளது.வெளியூர்களுக்கு சென்று வரும் எண்ணற்ற ரயில் பயணிகளின் நலன் கருதி, மீண்டும் உணவகத்தை விரைவில் துவக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, பயணிகள் மத்தியில் கோரிக்கை நிலவுகிறது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...