Tuesday, June 13, 2017

பணியிட மாறுதலில் குழப்பம்: டாக்டர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்12ஜூன்2017 23:53

வாக்குறுதி அளித்தபடி, கவுன்சிலிங் இன்றி, ௩௩ டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதலை, மருத்துவ கல்வி இயக்ககம் ரத்து செய்யாததால், அரசு டாக்டர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்; முதுநிலை மருத்துவம் படித்த டாக்டர்களுக்கு, பணி வழங்குவதற்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதில், முக்கிய நகரங்களில், கவுன்சிலிங் இன்றி, முறைகேடாக பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர் சங்க தலைவர், லட்சுமி நரசிம்மன் கூறியதாவது:கவுன்சிலிங் நடத்தாமலேயே, முக்கிய நகரங்களில், 33 டாக்டர்களுக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டன. டாக்டர்கள் போராடிய நிலையில், இட மாறுதல்களை ரத்து செய்வதாக, மருத்துவ கல்வி இயக்ககம் உறுதி அளித்தது; இதுவரை ரத்து செய்யவில்லை. முக்கிய நகரங்களில் உள்ள காலியிடங்களை மறைத்து, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

கவுன்சிலிங் துவங்கியது

அரசு டாக்டர்களின் பணி இடமாறுதல் கவுன்சிலிங், மே, 26ல் துவங்கியது. முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை தர எதிர்ப்பு தெரிவித்து, சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், இரண்டு முறை கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில், நேற்று இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கியது. இன்று, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், நாளை, பயிற்சி டாக்டர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...