Saturday, June 17, 2017

ஆஸ்திரேலியா விசா: ஆன்லைனில் விண்ணப்பம்


பதிவு செய்த நாள்17ஜூன்2017 00:13

புதுடில்லி: ஆஸ்திரேலியா செல்வதற்கான விசா பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி, ஜூலை, 1ம் தேதி முதல் அமல் படுத்தப்பட உள்ளது.இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் தற்காலிக துாதர், கிறிஸ் எல்ஸ்டாப்ட், டில்லியில் கூறியதாவது:ஆஸ்திரேலியாவுக்கு, இந்தியர்கள் வருகை, சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, ஜூலை முதல், இந்த ஆண்டு, மார்ச் வரை, ஆஸ்திரேலியாவுக்கு, 2.65 லட்சம் இந்தியர்கள் வந்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட, 15.4 சதவீதம் அதிகம்.ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் இந்தியர்கள், 

எளிதில் விசா பெற, வசதி செய்யப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா செல்வதற்கான விசா கேட்டு, ஜூலை, 1ம் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குடியேற்றத்துறை இணையதளத்திலேயே, இதற்கான விண்ணப்பத்தை பெற்று, விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்ப கட்டணத்தையும் மின்னணு முறையிலேயே செலுத்தலாம். விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியும் வசதியும் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025