Saturday, June 17, 2017

சொல்லாமல் 'லீவு' போட்டதால் எதிர்ப்பு : தலைமையாசிரியை, ஆசிரியை மோதல்

பதிவு செய்த நாள்17ஜூன்2017 00:36

கரூர்: சொல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டு வந்த ஆசிரியை, வருகை பதிவேட்டில் கையெழுத்திட சென்றதற்கு, தலைமையாசிரியை எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரிடையே மோதல் ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், ராயனுாரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை தேன்மொழி, 35. நேற்று காலை, 9:30 மணிக்கு வருகை பதிவேட்டில் கையெழுத்து போட, தலைமையாசிரியை அறைக்கு சென்றார்.
அப்போது, தலைமையாசிரியர் சிவகாமசுந்தரி, 'அனுமதி இல்லாமல் விடுமுறை எடுத்ததால், கையெழுத்து போட அனுமதிக்க முடியாது' என, கூறியுள்ளார். இதை கேட்ட, ஆசிரியை தேன்மொழி, 'உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதியுடன், விடுமுறை எடுத்துள்ளேன்; அதனால், நான் கையெழுத்து போடுவேன்' என, கூறினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரமணி, பள்ளிக்கு சென்று, இருவரிடமும் விசாரணை நடத்தினார். 

அப்போது, 'இருவரும் தனித்தனியாக புகார் எழுதி கொடுங்கள்; அதை அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதனால், பிரச்னை முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025