Sunday, June 18, 2017

எய்ம்ஸ்' மருத்துவமனை கோரி தஞ்சையில் மனித சங்கிலி

பதிவு செய்த நாள்17ஜூன்2017 22:27

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் இருந்து புதுக்குடி வரை, 4 கி.மீ.,க்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உட்பட, 2,000த்துக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

நாகை - கூடலுார் மற்றும் பெரம்பலுார் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை மத்தியில் செங்கிப்பட்டி அமைந்துள்ளது.மேலும், திருச்சி, தஞ்சை இரண்டு விமான நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன. செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் பழனிசாமி ஆகியோரும் பரிந்துரை செய்துள்ளனர்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்கள்
வலியுறுத்தினர்.



No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025