4 லட்சம் ஊழியர்களுக்கு 'கல்தா' : ரயில்வே திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
பதிவு செய்த நாள்
ஜூன் 15,2017 01:30
திருச்சி: 'ரயில்வே ஊழியர்களுக்கான புதிய கட்டாய பணி ஓய்வு திட்டம், பழிவாங்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ளது' என, டி.ஆர்.இ.யூ., தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின், தலைமை கணக்கு அலுவலர், சமீபத்தில் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில், 'தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களில், 55 வயது முடிந்தவர்கள் அல்லது, 30 ஆண்டு பணி நிறைவு செய்தவர்கள் பட்டியலை, தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டவர்களை, புதிய கட்டாய பணி ஓய்வு திட்டம் மூலம், வீட்டுக்கு அனுப்பவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக, தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டி.ஆர்.இ.யூ., தொழிற்சங்கத்தின் துணைப் பொதுச் செயலர், மனோகரன் கூறியதாவது:
இது, பன்னாட்டு நிறுவனங்கள் போல், அனுபவம் மிக்கவர்களை வெளியேற்றி விட்டு, அனுபவம் இல்லாத புதியவர்களை, குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தும் முயற்சியாகும். அதிக ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு, கூடுதல் அலவன்ஸ் மற்றும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது.
அவர்களை வெளியேற்றி விட்டால், பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம். மேலும், தொழிற்சங்கவாதிகளை பழிவாங்கவும் இத்திட்டத்தை பயன்படுத்தப்படலாம். ரயில்வே பாதுகாப்பிற்கு பணி அனுபவம் மட்டுமே சிறந்த அளவுகோல். ஆகையால், இந்த கட்டாய பணி ஓய்வு திட்டத்தை, ரயில்வே துறை கைவிட வேண்டும்.
இத்திட்டத்தை எதிர்த்து, கடும் போராட்டங்கள் நடத்தப்படும். தெற்கு ரயில்வே மட்டுமல்லாது, மற்ற ரயில்வேக்களும் இத்திட்டத்தை அறிவிக்கும். இதன் மூலம், நாடு முழுவதும், 4 லட்சம் ரயில்வே ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்; இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கூறினார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் தரப்பில், 'இது, ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் திட்டம் தான். உடனடியாக பென்ஷன் வழங்கப்படும்.
'மேலும், திறன் இல்லாத ஊழியர்கள், அடிக்கடி பணிக்கு வராதவர்களை விலக்கி விட்டு, திறமையானவர்களை பணியில் அமர்த்த வசதியாக இருக்கும். கூடுதல் நிதிச்சுமையும் குறையும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்' என்றனர்.
எவ்வளவு பேர் : நாடு முழுவதும், ரயில்வே துறையில் பணிபுரியும், 13.16 லட்சம் ஊழியர்களில்4.94 லட்சம் ஊழியர்கள், 55 வயதை நிறைவு செய்து, 30 ஆண்டுகள் பணி முடித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் மட்டும், 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

No comments:
Post a Comment