Saturday, June 10, 2017

சாம்பார், ரசம் மறந்த வீடுகள்! கொத்தமல்லி கட்டு 50 ரூபாய்!


மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கத்துக்காக ஏப்ரல் - மே மாதங்களில் 45 நாள்கள் கடலில் மீன் பிடிக்க அரசின் தடை உத்தரவு உள்ளது. இந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலம் 45 நாள்களிலிருந்து 61 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மீன் சந்தையில் கடல் மீன்கள் விற்க வாய்ப்பு இல்லாததால், தூண்டில் மீன், ஆற்றுமீன், நண்டு மற்றும் வெளிமாநில மீன்களே விற்கப்படுகிறது. மீன் விற்பனை இப்படியிருக்க, காய்கறி சந்தையிலும், வரத்து குறைந்துள்ளது. எவ்வளவு வரத்து குறைந்திருந்தாலும், தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், கேரட், உருளைக்கிழங்கு, பல்லாரி, நூக்கல், சவ்சவ், பீட்ரூட் , முட்டைக்கோஸ் போன்றவை சந்தையில் போதுமான அளவு கிடைக்கத்தான் செய்கிறது.

சந்தையில் கிடைக்காத பொருளாக இருப்பது, புதினாவும், கொத்துமல்லியும்தான்! இரண்டு முதல் மூன்று கட்டுகள் வரையில் ஐந்து ரூபாய்க்கு விற்றுவந்த புதினாக்கீரை, இன்று கட்டு ஒன்று 15 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது. ஐந்து ரூபாய்க்கு ஒரு கட்டு விற்ற கொத்தமல்லியோ 'சின்னகட்டு' 35 ரூபாய், பெரிய கட்டு 50 ரூபாய் என்றளவில் விற்கப்படுகிறது. விலையில்லா விலையில் புதினாவும், கொத்தமல்லியும் விற்றுக் கொண்டிருப்பதால், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து சந்தைகளிலும், 'கொத்தமல்லி இன்றைய விலை' என்ற பட்டியல் எங்கும் இல்லை. இந்த விலைக்கு கொத்தமல்லியை வாங்கி விற்க முடியாது என்று வியாபாரிகள் கருதியிருக்கலாம்.




"வீட்டில் சாம்பாரும், ரசமும் வைத்து எத்தனை நாள்களாகிறது" என்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரையாவது, கேட்டுப் பாருங்கள். அப்படியே நம்ம வீட்டிலும், 'ரசம்-சாம்பார்' மிஸானது எப்படி என்று வீட்டிலும் கேட்டுப் பாருங்கள். வாசலில் சின்னதாய் மண் தொட்டியில் 'தனியா' விதைகளைத் தூவிவிட்டு பத்து நாள்கள் விட்டு வைத்தால் வாசமான கொத்தமல்லியை வீட்டிலேயே விளைவிக்கலாம். கொஞ்சம் யோசிப்பவர்கள், சுவையான ரசமும், சாம்பாரும் சாப்பிட வழியில்லாமல் இருக்க வேண்டியதுதான்.

Dailyhunt

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...