Saturday, June 10, 2017

'ஏமாற்றியவன் மீது நடவடிக்கை எடுங்கள்'... நீதி கேட்டு சிலம்புடன் நிற்கும் மதுரையின் நவீன கண்ணகி!

ஈ.ஜெ.நந்தகுமார் செ.சல்மான்

காதலித்து, சேர்ந்து வாழ்ந்து, திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கோமதி என்ற இளம்பெண் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கண்ணகியைப் போல, கையில் சிலம்போடு நீதி கேட்டு வந்தது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.



"திருமண ஆசைகாட்டி காதலித்த காதலன், மூன்று வருடம் தன்னிடம் தொடர்பில் இருந்துவிட்டு, தற்போது என்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார். இவரால் கரு உண்டாகி, இரண்டுமுறை கலைத்துள்ளேன். காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நீங்கள்தான் நியாயம் வழங்க வேண்டும்" என்று கையில் சிலம்புடன் கண்ணகியைப் போல நீதி கேட்டு இன்று காலை இளம்பெண் ஒருவர் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவரிடம் பேசினோம், " என் பெயர் ஸ்டெல்லா பேபி என்ற கோமதி. செல்லூரில் இருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு கீழவாசல் சர்ச்சுக்கு சென்றபோது, டி.வி.எஸ்.நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரைப் பார்த்தேன். அடிக்கடி அங்கு அவரைப் பார்த்த நான், அவரை காதலிக்கத் தொடங்கினேன்.

எப்போது திருமணம் செய்யலாம் என்று கேட்டால், தன் அக்காவுக்கு திருமணம் முடிந்ததும் செய்யலாம் என்று சொல்லி என்னிடம் நெருங்கிப் பழகியதால், என் வயிற்றில் இரண்டுமுறை குழந்தை உண்டானது. அவரின் கட்டாயத்தால் அதைக் கலைத்தேன். ஆனால், கடைசியில் என்னை முழுவதுமாக கைகழுவி, பார்க்கிறதை பார்த்துக்கோன்னு சொல்லிட்டுப்போயிட்டார். என் தாய் இறந்துவிட்டார். என் தந்தை படுத்தபடுக்கையாக உள்ளார். எந்த ஆதரவுமில்லாமல் அநாதையாக நிற்கிறேன். எனக்கு உதவ யாருமில்லை. சில மாதங்களுக்கு முன்பு, செல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்; நடவடிக்கை இல்லை. சமீபத்தில் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால்தான் கண்ணகி நீதி கேட்டதுபோல கலெக்டரிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன்" என்றார். இவரின் புகாரை விசாரிப்பதாகச் சொல்லி, கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மனுவை வாங்கிக்கொண்டு அனுப்பினார்கள்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...