Sunday, June 11, 2017

நடவடிக்கை..!வரி தாக்கலில் கூடுதல்வருமானம் காட்டப்பட்டிருந்தால்...

புதுடில்லி, 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வருமான வரி தாக்கலில், கூடுதல் வருமானம் காட்டப்பட்டிருந்தால், அது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
@Image1@பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவ., 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிப்பதற் காக இந்த நடவடிக்கை என, பிரதமர் அறிவித் தார். மேலும், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளவும், டிசம்பர், 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த கால கட்டத்தில், வங்கியில் யாருடைய கணக்கில், அதிகளவில் செல்லாத ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டது என்பதை வரு மான வரித்துறை ஆய்வு செய்தது. மேலும், 'பினாமி' கணக்குகளில், பணம் செலுத்தியவர் கள் பற்றியும் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிலையில், 2016 - 17ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல், கடந்த மார்ச், 31ம் தேதியுடன் முடிந்தது. நாடு முழுவதும் பல லட்சம் பேர், வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர்.

இந்த கணக்குகளை, வருமான வரித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து வருகின்றனர்.இது பற்றி, வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், அதிக தொகை

டிபாசிட் செய்யப்பட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஜன்தன் கணக்குகள் பற்றிய விபரங் களை, வங்கிகளிடம் இருந்து வருமான வரித்துறை பெற்றுள்ளது.

இந்த கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம். அத் துடன், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வருமானம் அதிகரித்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். அப்படி வருமானம் அதிகரித் துள்ளது தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர், நிறுவனத் திடம், இ - மெயில் மூலம் விபரங்கள் கேட்கப்படும். இதற்கு சரியாக பதில் அளிக்காதவர் களிடம், அடுத்த கட்டமாக சோதனை நடத்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.

7 பேர் குழு அமைப்பு

கறுப்பு பணம் குறித்து தானாக முன்வந்து அறிவிக் கும் திட்டம், இப்போது அமலில் இல்லை. இதனால், வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயை தான், மத்திய அரசு பெரிதும் நம்பியுள்ளது.குறிப்பாக, 2016 - 17ம் நிதியாண்டில், வரி பாக்கித் தொகை, 8.24 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, இப்போது, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. அதனால், வரி ஏய்ப்பாளர்கள் மீது, கடும் நடவடி க்கை எடுத்து, வரி வசூலை அதிகப்படுத்த, வருமான வரித் துறையைஅரசு கேட்டு கொண்டுள்ளது.

இதற்காக, வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் ஏஜன்சிகள் ஆகியவற்றிடம், கோடிக் கணக்கில் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விபரங்களை, வருமான வரித்துறை கேட்டுள்ளது. இவர்களது பெயர்கள், நிறுவனங் களை, பகிரங்கமாக விளம்பரப்படுத்தி அவமானப் படுத்தவும் முடிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கையை, வருமான வரித்துறை எடுத்து வருகிறது.

இதுவரை, கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்து தலைமறைவாகிவிட்ட, 96 நிறுவனங் களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது. மேலும், வரி பாக்கியை வசூலிக்க, எடுக்க

வேண்டிய நடவடிக்கை குறித்து பரிந்துரைக்க, வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் ஆதித்ய விக்ரம் தலைமையில் ஏழு பேர் கொண்ட கமிட்டியை, மத்திய நேரடி வரிகள் வாரியம் அமைத்துள்ளது. இந்த கமிட்டி, தன் அறிக்கையை, ஜூலை, 15க்குள் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான தகவல் தராவிட்டாலும் சிக்கல்

மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், கறுப்பு பணம் அதிகளவில் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், கறுப்பு பணத்தை மீட்க பல்வேறு நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டது. கறுப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவித்து, வரி விதிப்பை குறைக்கவும், சலுகை வழங்கப்பட்டது.ஆனால், இந்த நடவடிக்கைகளால், எதிர்பார்த்த அளவுக்கு, கறுப்பு பணத்தை மீட்க முடிய வில்லை. 5,000 கோடி ரூபாய் அளவில் தான், கறுப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது.

அதனால் தான், வருமான வரி கணக்கு தாக்கலை தீவிரமாக ஆய்வு செய்ய வருமான வரித் துறையிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் வருமானம் குறித்து சரியான தகவல் அளிக்காதவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...