Wednesday, June 14, 2017

பொறியியல் முடித்தவர்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்: அண்ணாபல்கலை. தகவல் !!
அண்ணாபல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் முடித்தவர்கள் பட்டம் பெற அந்தந்த உறுப்பு கல்லூரிகளில் வரும் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணாபல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 5 மண்டலங்களில் பட்டமளிப்பு விழா நடக்கும் தேதிகளையும் அறிவித்துள்ளது.

ஜூன் 21ம் தேதி கோவையிலும், ஜூன் 22ம் தேதி விழுப்புரத்தில், ஜூன் 23ம் தேதி திருச்சியிலும், ஜூன் 24ம் தேதி திண்டுக்கல்லில், ஜூன் 28ம் தேதி தூத்துக்குடியில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025